வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை ரத்து செய்த டொனால்ட் டிரம்ப்


உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்த வார இறுதிக்குள் 30 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூசி வினியோக திட்டங்களை கவனிக்கும் மூத்த ராணுவ அதிகாரி குஸ்டாவ் பெர்னா கூறினார்.

Also Read  'தளபதி 67' படத்தினை இந்த பிரபல நடிகரின் தந்தை தயாரிக்கிறாராம். ? வெளியான தகவல்..

இந்த  திட்டத்தின் ஒரு பகுதியாக அதிபர்  டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளுக்கு  கொரோனா  தடுப்பூசி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.

வெள்ளை மாளிகையில் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளிலும்  உள்ள சில அதிகாரிகள் அடுத்த 10 நாட்களுக்குள் தடுப்பூசி போடப்படும்  வேண்டும் என்று வெள்ளைமாளிகை  வட்டாரம் தெரிவித்தன

Also Read  15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! - எவ்வளவு தெரியுமா?

டிரம்ப் உடனடியாக தடுப்பூசி பெறுவாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.  ஏற்கனவே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து உள்ளார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் உலியோட் இது குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் 

தேசிய பாதுகாப்புத் தலைமையின் ஆலோசனையின் பேரில் அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் பெறும் அதே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி தங்களுக்கும் கிடைக்கிறது என்ற நம்பிக்கை அமெரிக்க மக்களுக்கு இருக்க வேண்டும்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, நமது தேசம்  வளர்ச்சிக்கு மீண்டும் திரும்புவதற்காக நாம்தொடர்ந்து பணியாற்றி நமது குடிமக்களுக்கு, அமெரிக்க அரசு தடையின்றி, அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தொடரும் என்பதை மேலும் உறுதி செய்யும்  என்று கூறினார்.

Also Read  மூழ்க போகிறதா உலகின் பெரும்பகுதி? மும்பையை விட 7 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது

வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.

 

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 3ம் அலை தொடக்கம்? – டெல்டா வகையை போல வீரியமிக்க சி12 வகை தொற்று பரவல்..!

Lekha Shree

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

வெயில் காலத்தில் கூட உருகாது! – திறக்கப்பட்டது உலகின் முதல் பனி ஹோட்டல்!- எங்கு தெரியுமா?

Shanmugapriya

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

Tamil Mint

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா தொற்று

sathya suganthi

பறவைகளை துல்லியமாக கண்காணிக்க உதவும் GPS ட்ராக்கர்… ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

Lekha Shree

2 நாட்களில் 7.10 லட்சம் மின்னல்கள் – பற்றி எரியும் காடுகள்..!

Lekha Shree

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்! எங்கு தெரியுமா?

Lekha Shree

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?

Lekha Shree

20 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அதிகம் பாதிக்கும் ‘டெல்டா’ வகை தொற்று…!

Lekha Shree

காபூல் விமான தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் மீது அமெரிக்கா பதில் தாக்குதல்..!

suma lekha