டயானாவுடன் நிற்பது 2 இல்லை 3 குழந்தைகள்…! சிலையில் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள்…!


இங்கிலாந்து இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவரை கௌரவிக்கும் வகையில், அவரது சிலையை இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி திறந்துவைத்தார்கள்.

1992ஆம் ஆண்டு, இளவரசர் சார்லஸும் இளவரசி டயானாவும் பிரிந்ததைத் தொடர்ந்து, முதன்முறையாக இருவரும் தனித்தனியே கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வெளியிட்டிருந்தனர்.

1993ஆம் ஆண்டு இளவரசி டயானா வடிவமைத்திருந்த வாழ்த்து அட்டையில், இளநீல நிற சட்டையும், மார்பருகே தடிமனான பெல்ட்டும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்த டயானா, இளவரசர் வில்லியமை அன்புடன் பார்ப்பது போலவும், இளவரசர் ஹரி தாயை அன்புடன் பார்ப்பது போலவும் இருக்கும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வாழ்த்து அட்டையில் அவர் அணிந்திருந்த அதே சட்டை, பெட்ல் மற்றும் ஸ்கர்ட்தான் இந்த சிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  மம்மிக்குள் என்ன இருக்கும்? சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்…!

ஆனால், புகைப்படத்தில் டயானாவின் அருகே அவரது மகன்கள் இருக்கும் நிலையில், இப்போது திறந்துவைக்கப்பட்டுள்ள சிலையை அருகே சென்று கவனித்தால், டயானாவுக்கு அருகே இரண்டு பேர் அல்ல, மூன்று பிள்ளைகள் நிற்பது தெரியும்.

டயானாவின் ஒரு பக்கம் ஒரு சிறுவனும், மறுபக்கம் ஒரு சிறுமியும் நிற்க, அவர்களுக்குப் பின்னாலும் ஒரு சிறுவன் நிற்பதைக் காணமுடிகிறது. அவர்களில் இருவர் கால்களில் செருப்பு கூட இல்லை.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா..!

அவர்கள் ஹரியும் வில்லியமும் அல்ல என்பது தெளிவாகிறது. அதாவது, சர்வதேச அளவில் டயானாவின் தொண்டு நிறுவனப் பணிகள் ஏராளமானோர் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் காட்டும் வகையில், அவர் சிறுவர்களுடன் நிற்பதுபோல அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணுக்கு 100 கசையடிகள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

பல பாம்புகள் தன் மீது விழுந்தபோதிலும் கேஷுவலாக பேசிக்கொண்டிருந்த நபர்! – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Tamil Mint

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya

உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவிற்கு ஏற்படும் அழுத்தம் !!!

Tamil Mint

உலகிலேயே அதி வேக இணையசேவை கொண்ட நாடு எது தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

Tamil Mint

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

Tamil Mint

பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலக தலைவர்கள்…! பட்டியல் வெளியீடு…!

sathya suganthi

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் – அதிபர் கிம் ஒப்புதல்!

Shanmugapriya

நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்படுவதால் டிரம்பும் பிடனும் வெள்ளை மாளிகைக்கான இறுக்கமான போரில் செல்கின்றன.

Tamil Mint

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க செயலி – ஆஸ்திரேலிய போலீசின் சர்ச்சை யோசனை

Devaraj