a

“ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்


சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பேனர்களை கிழித்ததுடன், அங்கு மு.க ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று திமுகவினர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தகராறு செய்தவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அம்மா உணவகத்தில் மீண்டும் பேனர் வைக்கப்பட்டது.. மேலும் ரகளை செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  அருணா சாய்ராமின் மகள் மரணம்

இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ், ஜெயக்குமர் உள்ளிட்ட அதிமுகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்..

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது

Also Read  வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது.

தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.

Also Read  புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் தமிழக முதலமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj

“எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும்!” – விஜயபிரபாகரன்

Lekha Shree

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

உயிருடன் உள்ள மூதாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

Tamil Mint

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

சசிகலா விடுதலை ஆகும் நாளன்று திறக்கப்படும் ஜெயலலிதா நினைவிடம்…!

Tamil Mint

வாக்காளர் அட்டை இல்லையா? இந்த ஆணவங்களை வைத்தும் ஓட்டு போடலாம்…!

Devaraj

களைகட்டிய டாஸ்மாக்….! முதலிடம் பிடித்த சென்னை…! ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு விற்பனையா..!

sathya suganthi

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint

“பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை”

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Tamil Mint