“சின்னம்மா குறித்து ஓபிஎஸ் சரியாகத்தான் பேசியிருக்கிறார்” – டிடிவி தினகரன்


சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தை தான் கூறியிருக்கிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முன்னதாக சசிகலா அதிமுகவில் இணைவது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கருத்தை சரி என கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் மகளுக்கும் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.

Also Read  மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு...

இதனையடுத்து இன்று தஞ்சை அருகே உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது இதில் சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக தஞ்சையில் உள்ள தனியார் விடுதியில் மருது சகோதரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த டிடிவி தினகரன், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “மருதுசகோதரர்கள் வீரத்திற்கும் விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் எங்களிடம் உள்ளார்கள்.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல் - 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…!

எனவே, இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு. ஓபிஎஸ் எப்போதுமே நிதானமாக பேசுபவர். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே பேசியுள்ளார்” என கூறியுள்ளார்.

ஆனால், இவ்வாறு ஓபிஎஸ் கூறியுள்ளது அதிமுகவினரிடையே உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மீண்டும் கட்சியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது .

Also Read  அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்... தடுமாறும் இபிஎஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

ஹாட்ரிக் அடிக்கும் மம்தா…! 4 இல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி அபாரம்…!

sathya suganthi

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree

ஜெயலலிதா வீடு: தீபக் கிளப்பும் புது பூதம்

Tamil Mint

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

Lekha Shree

“நெல்லையில் ‘பொருநை’ அருங்காட்சியகம் அமைக்கப்படும்” – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Lekha Shree

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

sathya suganthi

திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

Tamil Mint

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி.

mani maran

இனி இஷ்டம் போல் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் : தெற்கு ரயில்வேயின் ஹேப்பி நியூஸ்

suma lekha

முதல்வர் பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடியில் தொடங்கினார்

Tamil Mint