துனீசியா: பிரதமரின் பதவியை பறித்த அதிபர்! காரணம் இதுதான்..!


துனீசியாவில் கொரோனா தொற்றை அரசு சரியாக கையாளவில்லை என மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக துனீசியாவின் அதிபர் பிரதமரின் பதவியை பறித்துள்ளார்.

ஏற்கனவே நாட்டில் பொருளாதாரம் மற்றும் சமூக கொந்தளிப்பு காரணமாக அமைதியின்மை நிலவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை அரசு சரியாக கையாளவில்லை என்ற மக்களின் கோபம் போராட்டமாக வெடித்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு துனீசியாவின் அதிபராக பதவியேற்ற கைஸ் சையத் தான் ஆட்சியை கவனித்துக் கொள்ளப்போவதாக அறிவித்து பிரதமரை பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினாலும் அதிபர் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read  கனடாவில் வாட்டி வதைக்கும் வெயில் - இதுவரை 486 பேர் உயிரிழப்பு…!

தடுப்பூசி திட்டங்களில் குளறுபாடுகள் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கொரோனா வைரஸ் தோற்று அதிகரிப்பால் மக்களின் நீண்டகால கோபம் அதிகரித்தது.

இந்நிலையில் பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

Also Read  20 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அதிகம் பாதிக்கும் 'டெல்டா' வகை தொற்று…!

மேலும், டூஜூரில் உள்ள என்ஹாடா கட்சி தலைமையகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், கட்சி அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

போராட்டத்தை அதிபர் தலையிட்டு சரி செய்தார். அதைத்தொடர்ந்து தான் ஒரு புதிய பிரதமருடன் இணைந்து செயலாற்ற உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தையும் 30 நாட்களுக்கு முடக்கிவைத்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “நாட்டில் ஆபத்து நிலை இருந்தால் நாடாளுமன்றத்தை முடக்க அரசியலமைப்பின் 80வது பிரிவின் கீ ழ் எனக்கு அதிகாரம் உள்ளது” என அதிபர்தெரிவித்தார்.

ஆனால் துனீசியாவின் சட்டம் மற்றும் அரசியல் கட்டமைப்பு தெளிவாக இல்லாததால் இது போன்ற சர்ச்சைகளைத் தீர்மானிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என 2014 அரசியலமைப்பு கோருகிறது. ஆனால் அது நிறுவப்படவில்லை.

Also Read  "வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!" - மத்திய அரசு

இந்நிலையில், இது ஆட்சிகவிழ்ப்பு நடவடிக்கை என ஹார்ட் ஆஃப் துனிசியா மற்றும் கராமா ஆகிய இரண்டு கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை…!

Devaraj

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

குரங்கின் மூளையில் சிப் பொருத்தி வீடியோ கேம் விளையாட்டு – ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி

Tamil Mint

விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – 10க்கும் மேற்பட்டோர் பலி

Devaraj

இளவரசர் ஹாரி-மேகனுக்கு 2வது குழந்தை பிறந்தது…! என்ன குழந்தை தெரியுமா…?

sathya suganthi

“இது புதுசா இருக்கே!” – வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய அப்டேட்… வரவேற்கும் யூசர்கள்..!

Lekha Shree

ஒரே ஒரு டுவீட்டுதான்…! பிட் காயின் மொத்த மவுசும் காலி…!

sathya suganthi

ஓய்வு பெற்றது “வேகப்புயல்” : டேல் ஸ்டெயின் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

mani maran

இதற்கெல்லாம் கூட ரோபோ பயன்படுமா…! அசத்தும் சிங்கப்பூர்…!

Devaraj

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi