a

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!


இந்தியில் பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகர் பியரல் பூரி. இவர் கடந்த 2019ம் ஆண்டு படப்பிடிப்பு ஒன்றில் நடிகை ஒருவரின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு மும்பை அருகில் உள்ள வசாய் பகுதியில் டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு நடிகை ஒருவர் அவரது 5 வயது மகளையும் அழைத்து வந்திருந்தார்.

அச்சிறுமியை பியரல் பூரி விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி தனது தாயாரிடம் இதுகுறித்து கூறிய போது அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் சிறுமிக்கு உடல்வலி எடுப்பதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனே அவளை அவளது தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தான் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.

Also Read  "ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும்"- அதிர்ச்சி சம்பவம்

சிறுமியும் முதல்நாள் நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூற, சிறுமியின் தந்தை இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தார்.

மும்பை வர்சோவா போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பின் சம்பவம் வசாய் பகுதியில் நடந்து இருப்பதால் வழக்கை அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

Also Read  PSBBயில் "கோயில் தீர்த்தம்" கொடுத்து அத்துமீறல் - அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

ஆனால், வசாய் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். பின்னர் நீட இழுபறிக்கு பிறகு சிறுமியின் வசாய் போலீசார் பியரலை இவ்வழக்கில் இப்போது கைது செய்துள்ளனர்.

மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் விசாரணைக்காக உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து வசாய் பகுதி டிஜிபி கூறுகையில், “பாலியல் பலாத்கார வழக்கு 2019ம் ஆண்டு வர்சோவாவில் பதிவு செய்யப்பட்டு வசாயிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.

மேலும், சம்பவம் குறித்து சிறுமியின் தாயாருக்கு தெரிந்து இருந்தும் அது குறித்து போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்த தாயார் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan

ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சொத்தும் போச்சு…. தெரு கோடிக்கு வந்த கஞ்சா கருப்பு….

VIGNESH PERUMAL

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

Tamil Mint

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

சூப்பர் ஸ்டாரை சந்தித்த லெஜெண்ட் சரவணா.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..!

HariHara Suthan

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

மாஸ்டர் படத்துக்கு எதிராக குவியும் மீம்ஸ்கள்! ட்ரெண்ட் ஆகும் #MasterDisaster

Tamil Mint

“டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது” – ராஷ்மிகா மந்தனா

Lekha Shree

‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஆர்யா…!

sathya suganthi