தோனியா? கோலியா? கேப்டன்சி குறித்து ட்விட்டரில் விவாதம்..!


இந்திய அணியின் கேப்டன்ஷிப் பற்றி ட்விட்டரில் விவாதம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன்ஷிப் குறித்து சமூக வலைதளங்களில் #Captaincy, #kohli போன்ற ஹேஷ்டேகுகளின் கீழ் விவாதம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாளில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி பேட்டிங்கில் இறங்கினர். அப்போது 64. ஓவர்களை கடந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

Also Read  பிரெஞ்சு ஓபன் - பட்டம் வென்றார் ரஃபேல் நடால்:

அந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் எடுத்து.

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் 4வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Also Read  121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!

அதைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5வது நாள் ஆட்டம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில், 6வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Also Read  இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்...!

இந்த எளிய இலக்கை நியூசிலாந்து வீரர்கள் சுலபமாக அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதன்முறையாக கைப்பற்றினர்.

இதனால், ஏமாற்றமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொலையின் கேப்டன்சியையும் தோனியின் கேப்டன்சியையும் ஒப்பிட்டு விவாதம் செய்து வருகின்றனர்.

ஒரு சிலர் ரோகித் சர்மா கேப்டனாக வரவேண்டும் என்ற தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #Captaincy, #kohli ஆகிய 2 ஹேஷ்டேகுகளும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகும் ஹிமாதாஸ்… இதுதான் காரணம்..!

Lekha Shree

ஐபிஎல்லில் கொரோனா – என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

Devaraj

4-வது டெஸ்டில் 369 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா… தலா 3 விக்கெட்டுகள் எடுத்து மாஸ் காட்டிய நடராஜன், சுந்தர்,ஷர்துல்..!

Tamil Mint

ஒலிம்பிக் 2020: வாள்வீச்சு போட்டியில் பவானி தேவி தோல்வி..!

Lekha Shree

ஹர்லீன் டியோல் பிடித்த கேட்ச் – மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான்கள்…!

Lekha Shree

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில், அபூர்வி ஏமாற்றம்!

Lekha Shree

பிரித்வி ஷா, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தை பாராட்டிய முரளிதரன்…!

Lekha Shree

முதல் தமிழன் – இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!

Lekha Shree

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Jaya Thilagan

“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” – பிசிசிஐ துணை தலைவர்

Lekha Shree

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சிங்கப் பெண் : குவியும் பாராட்டுகள்

suma lekha