ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் – பார்வையாளர்களுக்கு அனுமதி?


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்தது பிசிசிஐ.

Also Read  நம்பர் ஒன் இடத்தில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம் - பெடரர் சாதனை முறியடிப்பு!

கொல்கத்தா அணியை சேர்ந்த வீரராகள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் மற்றும் சென்னை அணியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மிரண்டுபோன பிசிசிஐ இந்த ஐபிஎல் சீசனை தற்காலிகமாக நிறுத்தியது.

இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளையும் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

Also Read  மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

அதன்படி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மேலும் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் துபாய்,அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிகளை காண தடுப்பூசி எடுத்துள்ள ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மைதான இருக்கைகளில் 50 சதவீதத்துக்கு மிகாமல் அமர்ந்து அவர்கள் போட்டிகளை காணலாம் எனவும் அமீரக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம்!" - ஒலிம்பிக் போட்டி தலைவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் சேசிங்கில் வீரர்கள் தடுமாறுவது ஏன்?

Lekha Shree

ஒரே ஒரு தங்கப்பதக்கத்தால் உலகத் தரவரிசையில் உச்சத்திற்கு சென்ற நீரஜ் சோப்ரா…!

Lekha Shree

தப்பு பண்ணிட்டியே பட்லரு.. நீ ஷமியை தொட்டிருக்க கூடாது: இங்கிலாந்து அணியை வச்சி செய்த இந்திய அணி.!

mani maran

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான்…!

Lekha Shree

கோப்பையை மட்டும் அல்ல நெட்டிசன்களின் மனதையும் வென்ற கோலி…!

Lekha Shree

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

‘இதென்னப்பா புதுசா இருக்கு..!’ – நாய்க்கு ஐசிசி விருது…! பின்னணி என்ன?

Lekha Shree

“டி20 கேப்டன்சியில் இருந்து விலகுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு..!

Lekha Shree

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு!!

Tamil Mint

கோலி-அனுஷ்காவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தாஜ் ஹோட்டல்…! வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

பதக்க மழையில் நனையும் இந்தியா..! பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரர்கள்..!

Lekha Shree

வீடு திரும்பினார் சச்சின் டெண்டுல்கர்!

Jaya Thilagan