ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு மசோதா – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்!


ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு திருத்த மசோதா கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியில் மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அது நிலை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

நிலைக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021ல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளன திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கூற முடியும்.

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

மேலும் திரைப்படத்துக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா குறித்து கடந்த சில நாட்களாக திரைப்படத்துறையினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது.

Also Read  ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா காட்டம்!

தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் மற்றும் இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் ஆகிய பலரும் இந்த ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  செல்வராகவனின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

Tamil Mint

பாக்ஸ் ஆபீசில் மோதவுள்ள 5 நட்சத்திர திரைப்படங்கள்..! களைகட்டும் 2021..!

Lekha Shree

வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lekha Shree

கங்கனாவின் திமிர் பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்த பிரபல நடிகை… வைரலாகும் ட்வீட்…!

Tamil Mint

‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு டிவி சீரியலில் இந்த வேடமா? – சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

அடுத்தடுத்து அப்டேட்…! ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்களை குஷிபடுத்தும் சன்பிக்சர்ஸ்…!

Devaraj

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Tamil Mint

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint