இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு


இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதனால் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.  

அதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி, நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்தியா வந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Also Read  கொரோனா பாதிப்பில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது..? மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்..

இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 20ஆக உயர்ந்துள்ளது. அதனால் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி 7ம் தேதி வரை தற்காலிக தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு இன்று (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா தடுப்பு ஊசி வேண்டாம்- அச்சத்தில் தெறித்து ஓடும் கிராம மக்கள்

இதுதொடர்பாக விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, “2021 ஜனவரி 7 ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட மறுதொடக்கம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யூ டியூப்-பில் எனக்கு மாசம் ரூ.4 லட்சம் வருது: அமைச்சர் நிதின் கட்கரி

suma lekha

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

ட்ரெண்டிங்கில் கே.டி. ராகவன் வீடியோ: தெளிவாக அறிக்கை கொடுத்து எஸ்கேப்-பான அண்ணாமலை.!

mani maran

பதக்க மழையில் நனையும் இந்தியா..! பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரர்கள்..!

Lekha Shree

அரசு நிகழ்ச்சியில் மோடியை கலாய்த்து தள்ளிய மம்தா பேனர்ஜி… கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து அசத்தல்!

Tamil Mint

கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

திமுகவில் இருந்து விலகிய விபி.துரைசாமி தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

இரயில்வே துறை தனியார்மயமாகுமா….? அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார்….

VIGNESH PERUMAL

புதிய கல்விக் கொள்கை மிக பெரிய தொலைநோக்கு திட்டம்! – பிரதமர் மோடி

suma lekha

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

கொரோனா தடுப்பு – மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்…!

Devaraj