a

வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களுக்கு வந்த சோதனை – ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பயர்கள்!


நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு வேகமாக பரவி வருகிறது. பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் ஐபிஎல் தொடர் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பார்வையாளர்கள் எப்படி நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர் சென்னை, கொல்கத்தா மும்பை டெல்லி உள்ளிட்ட ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெறுகிறது.

சென்னை, மும்பையில் 20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் டெல்லியில் நடந்து வருகின்றன.

நோய் பரவல் மற்றும் சொந்த காரணங்களுக்காக முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

Also Read  ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

முதல் முறையாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது நடுவர்கள் இரண்டு பேர் ஐபிஎல் இல் இருந்து விலகி இருப்பது கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பால் ரீஃபிலும் இந்தியாவின் நித்ய மேனன் ஆகிய இருவரும் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Also Read  பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

நிதின் மேனனின் மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் உடனடியாக தனது சொந்த ஊரான இந்தூருக்கு புறப்பட்டுள்ளார்.

இதேபோல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் ரீஃபில் கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

Also Read  சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியில் நிகழ்ந்த முக்கிய துளிகள்!

ஐபிஎல் முடிந்த பிறகு நாடு திரும்ப முடியாமல் சிக்கல் ஏற்படும் என்பதால் அவர் சொந்த ஊர் புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் தொடரில் இருந்து விலகுவதால் அவர்களுக்கு பதிலாக மாற்று நடுவர்கள் களம் இறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடப்பு ஐபிஎல் தொடரில் யாரிடம் இருக்கிறது ஆரஞ்சு கேப்?

Jaya Thilagan

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!

Jaya Thilagan

டிஸ்சார்ஜ் ஆனார் முத்தையா முரளிதரன்!

Devaraj

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

ஐபிஎல் 2021: பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு!

Lekha Shree

ஹனுமா விஹாரியை மிஸ் செய்கிறேன் – மனம் திறந்த புஜாரா!

Jaya Thilagan

சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

Jaya Thilagan

இனி நான் தான் ஓப்பனர் – கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

Devaraj

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரண்டாவது வீரருக்கு கொரோனா உறுதி!

Jaya Thilagan

உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

துவம்சம் செய்த படிக்கல் – விராட் கோலி ஜோடி : ராஜஸ்தான் அணி மீண்டும் தோல்வி

Jaya Thilagan

வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா – மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

Lekha Shree