ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கானின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய போது, “எங்கள் நாடு இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது.

அதேநேரம் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலவச் செய்ய முடியும்” என்று கூறினார்.

இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு ஐ,நாவுக்கான இந்திய பிரதிநிதியும் செயலாளருமான ஸ்னேகா துபே உடனடியாக பதிலடி கொடுத்தார்.

Also Read  இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

அப்போது, “ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்து விட்டு, அந்த தீயை அணைக்க முற்படுவது போல பாகிஸ்தானின் செயல் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்துவிட்டு கொண்டுள்ளது. இதனால் உலகமே ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

உலக அரங்கில் பொய்யை பரப்பும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான்.

Also Read  பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

உலகையே அதிர வைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான் தான். அதை எந்த ஒரு நாடும் எப்போதும் மறக்காது.

பின்லேடன் போன்ற ஒரு நபரை பாகிஸ்தான் தியாகி போல் இப்போதுவரை சித்தரிக்கிறது.

Also Read  பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் ராஜினாமா..!

பாகிஸ்தான் அமைதியை மீட்பதற்கு நினைத்தால் அதற்கு முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமைதான்” என காட்டமாக தெரிவித்தார் ஸ்னேகா துபே.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செவிலியர்களின் பாதங்களுக்கு பூத்தூவி நன்றி தெரிவித்த நபர்!

Shanmugapriya

27 நொடிகளில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் நிகழ்வு!

Shanmugapriya

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ரூ.196 கோடி நிவாரணம் – கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு அறிவிப்பு

Devaraj

தீவிர புயலாக மாறும் ஷாகீன்…! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

டெல்லியில் விவசாயி உயிரிழந்த சம்பவம்: 7 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Tamil Mint

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று…!

Devaraj

CLUBHOUSE பயனர்களின் விவரங்கள் DARK WEB-ல் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்..!

suma lekha

ரெம்டெசிவர் மருந்துக்கு இறக்குமதி வரி ரத்து

Jaya Thilagan

சைலஜா டீச்சர் தான் வேணும் – அடம்பிடிக்கும் கேரள மக்கள்…!

sathya suganthi

ஜூலை 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

தாலிபான்களிடம் லட்ச கணக்கில் ஆயுதங்கள்- அதிர்ச்சி தகவல் !

suma lekha

பேத்தியின் படிப்புக்காக தன் ஒரே வீட்டை விற்ற முதியவர்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya