ஆப்கானிஸ்தான்: மரணத்தின் விளிம்பில் லட்சக்கணக்கானோர்… எச்சரிக்கும் ஐ.நா செயலாளர்..!


ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா சபை செயலாளர் ஆண்டனியோ குட்டாரஸ் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டு மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அதில் மிக முக்கியமானது பொருளாதார நெருக்கடி என்றும் கூறப்படுகிறது.

Also Read  “உலகின் அழுக்கான மனிதர்” – 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர்! – காரணம் என்ன தெரியுமா?

ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆண்டுகளாக அமெரிக்கா கொடுத்து வந்த ராணுவ பலம், நிதி உதவி என அனைத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தியது.

இதனால், பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் அனைவரும் கடும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக 5 வயதுக்கு கீழ் உள்ள 32 லட்சம் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா சபை செயலாளர் ஆண்டனியோ குட்டாரஸ் எச்சரித்துள்ளார்.

ஐ.நா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆப்கான் மக்களை காப்பாற்ற 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளிக்க சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்து அங்கு பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியை தவிர்க்க வங்கி முறையை கொண்டு வரவேண்டும். மனித உயிர்களை காப்பாற்ற பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நடைமுறைகள் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

Also Read  காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன்- அஷ்ரப் கனி வருத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகினார் ஜெப் பெசோஸ்… என்ன காரணம்?

Tamil Mint

சீன தொழிலதிபருடன் நெருங்கிய தொடர்பு – இதுதான் பில்கேட்ஸ் விவகாரத்துக்கு காரணமா…!

sathya suganthi

கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து..!

Lekha Shree

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya

ஹாலோவீன் தினமின்று

Tamil Mint

ஆப்கானுக்கு பாய் சொன்ன அமெரிக்கா: குண்டு முழக்கங்களுடன் கொண்டாடிய தாலிபான்கள்

suma lekha

தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

Tamil Mint

ஆப்கானிஸ்தானின் இடைக்கால மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு.. பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் தேர்வு..!

suma lekha

கொரோனா தடுப்பூசி போடாவிடில் சிறை – எங்கு இந்த உத்தரவு தெரியுமா?

sathya suganthi

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

Lekha Shree

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

ஆப்கானிஸ்தானை அழிவில் இருந்து தடுத்து நிறுத்துங்கள் : ஆப்கன் கிரிக்கெட் வீரர் உருக்க பதிவு.!

suma lekha