எஸ்.எஸ்.ஐ கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!


திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆடு திருடும் கும்பல் தப்பி செல்வதும் அவர்களை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் விரட்டி செல்வதுமாக கிடைத்த சிசிடிவி காட்சிகள் செல்போன் சிக்னல் கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவியது.

திருச்சி பூங்கொடி காலனி பகுதியில் இருந்து தப்ப முயன்ற ஆடு திருடர்களை விரட்டிய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் மாவட்ட எல்லையை கடந்து புதுக்கோட்டையில் உள்ள கீரானூர் அருகே உள்ள பகுதியில் மடக்கி பிடித்து உள்ளார்.

Also Read  தமிழகம்: வரும் 16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!

இதுகுறித்து திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் தன்னுடன் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகருக்கு தகவலை தெரிவித்து தான் இருக்கும் இடத்தின் லொகேஷன்-ஐ செல்போனில் அனுப்பியுள்ளார்.

அதையடுத்து அந்த கும்பலில் இருந்த 9 வயது சிறுவனின் தாயாரிடம் செல்போனில் 23 நிமிடங்கள் பேசி உள்ளார் பூமிநாதன்.

Also Read  திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து…! கோயம்பேட்டில் பரபரப்பு..!

இதனிடையே இரவு மற்றும் பழக்கப்படாத இடம் என்பதால் சக காவலர்கள் குறித்த இடத்திற்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி மணிகண்டன் என்பவர் பூமிநாதன் காலை வாரி கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த ஆடு வெட்டும் அரிவாளால் அவரது பின் தலையில் வெட்டியுள்ளார்.

அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த படுகொலையில் இரண்டு சிறுவர்களும் சம்பந்தப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் பூமிநாதன் தனது செல்போனில் பேசிய சிறுவனின் தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், “கபடி விளையாட செல்வதாக உறவினரான மணிகண்டன் எனது மகனை அழைத்து சென்றார்” என்று கூறியுள்ளார்.

Also Read  'வார் ரூம்' வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

இதனை அடுத்து மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். அதில் மணிகண்டனை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் 2 சிறுவர்களை சிறார் நீதி குழு நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி உத்தரவின் பேரில் மணிகண்டனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருமயம் கிளை சிறையிலும் சிறுவர்கள் இருவரை சிறார் சீர்திருத்த பள்ளியிலும் காவலர்கள் அடைத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

தனித்து வாழும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை – தனியார் நிறுவன ஊழியருக்கு வலை…!

sathya suganthi

தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

sathya suganthi

’பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி’ – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

suma lekha

வேலூரில் சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகள் கூடிய ‘நறுவீ ‘ மருத்துவமனை திறப்பு!

Tamil Mint

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

Tamil Mint

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக…!

Lekha Shree

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! ஒரே நாளில் 197 பேர் பலி…!

Lekha Shree

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்

Tamil Mint