உ.பி.,சட்டபேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக… யோகி இந்த தொகுதியில் நிற்கிறாரா?


உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கோரக்பூர் தொகுதியிலிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சட்டபேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இதில் 58 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில் 57 பெயர்களைக் கொண்ட பட்டியலும், 55 தொகுதிகளை கொண்ட இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான 48 பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read  இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.

மொத்தம் 107 பெயர்களை கொண்ட இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் 44 வேட்பாளர்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 40 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி 107 வேட்பாளர்களில் 10 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி உள்ளது. அதேபோல பட்டியலினத்தவர்களைப் பொறுத்தவரை 19 பேருக்கு அக்கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது

இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Also Read  தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பொறுத்தவரை அயோத்தி தொகுதியில் போட்டியிடுவார் என யூகங்கள் சொல்லப்பட்ட நிலையில் அவரது சொந்த தொகுதியான கோரக்பூர் தொகுதியிலேயே அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதி 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கண்ட யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக உள்ள தொகுதி ஆகும். அதேபோல துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சிராது தொகுதியில் களம் காண்கின்றார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அமித்ஷா சத்தத்தினால் வெற்றி பெற்றுவிட முடியுமா?” – பிரசாந்த் கிஷோர்

Shanmugapriya

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் அளித்த அசத்தல் பரிசு…!

Lekha Shree

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

Lekha Shree

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint

வீடியோ மூலம் வேலை வாங்கிய இளைஞர்! – என்ன செய்தார் தெரியுமா?

Shanmugapriya

உள்ளாட்சி தேர்தல்: திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

suma lekha

“இந்தியா 2 மடங்கு முன்னேறியிருக்கிறது” – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!

Shanmugapriya

கேரளாவில் கனமழை… நிலச்சரிவில் சிக்கி 12 பேர் மாயம்..!

Lekha Shree

பிரபல நடிகர் திடீர் மரணம்

Tamil Mint

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்

Shanmugapriya

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

ஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ! – டெல்லி போலீஸ் விழிப்புணர்வு

Shanmugapriya