கோராக்பூர் தொகுதியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்…! பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!


உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோராக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் முதல் கட்ட தேர்தல் 58 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில், 57 பேர் கொண்ட பட்டியலும் 55 தொகுதியைக் கொண்ட இரண்டாம் கட்ட தேர்தலுக்கான 48 பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.

மொத்தம் 107 பெயர்களைக் கொண்ட இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் 44 வேட்பாளர்கள் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள்.

Also Read  தேவாங்கர் செட்டியார் சங்கக் கூட்டம் – ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவு திரட்டிய மகன்…!

சமீபத்தில் ஓபிசி தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்ததன் காரணமாக அதை சரிகட்ட ஓபிசி பிரிவினருக்கு முதல் வேட்பாளர் பட்டியலில் முக்கியத்துவம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பாஜகவில் 10 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  சிகரெட்டுக்கு தடை விதித்த நியூசிலாந்து..! இந்தியாவும் முயலலாமே என அன்புமணி யோசனை..!

அதேபோல் பட்டியலினத்தவர்களைப் பொறுத்தவரை 19 பேருக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடுவார் என யூகங்கள் இருந்த நிலையில், அவர் சொந்த தொகுதியான கோரக்பூர் தொகுதியிலேயே களம் காண்கிறார்.

Also Read  "சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல" - நடிகை கஸ்தூரி ஆவேசம்!

நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் நின்று 5 முறை வெற்றி கண்டுள்ளார் யோகி ஆதித்யநாத். எனவே, கோராக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என்றே கூறலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லை: ஊராட்சி மன்ற தலைவராக 90 வயது மூதாட்டி தேர்வு..!

Lekha Shree

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: கடும் கோபத்தில் ராகுல்

Tamil Mint

மாரிதாஸ் Vs செந்தில் பாலாஜி White Board முதல் FootBoard வரை..!ட்விட்டரில் முற்றிய வார்த்தை போர்!

Lekha Shree

‘ஜெய் பீம் வன்னியர்களை தாக்குகிறதா?’ – எழுத்தாளர் புகார்… இயக்குனர் வருத்தம்..!

Lekha Shree

“அந்த மனசு தான் சார் கடவுள்!” – கொரோனா பாதித்த குழந்தை… காப்பாற்றிய செவிலியர்…!

Lekha Shree

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

Lekha Shree

மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி ஆரம்பிக்கப்போகும் புதிய கட்சி… அதிகாலையில் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு…!

Tamil Mint

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

“தேமுதிக விலகியதால் பாதிப்பு இல்லை” – எல். முருகன்

Shanmugapriya

பாலியல் வன்கொடுமை வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீன்… விநோத வழக்கில் கடுப்பான உச்சநீதிமன்றம்!

Devaraj