பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – சர்ச்சை தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்து!


உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்ஹஞ் என்னும் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி 13 வயது சிறுமி ஒருவர் வயல்வெளிகளில் காய்கறிகளை பறித்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். இதற்கு சிறுமி மறுக்கவே அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோரும் அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்று, இளைஞரின் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்.

Also Read  சிவசங்கர் பாபா வழக்கு - சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை தலைமறைவு!

ஆனால், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் தங்களுக்கு நீதி வேண்டும் என கோரி சிறுமியின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தை அணுகியுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இளைஞரின் குடும்பம் ரூ.50,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த இளைஞனை ஐந்து முறை செருப்பால் அடிக்கலாம் எனவும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

Also Read  ஐ.சி.சி. கிரிக்கெட் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த மிதாலிராஜ்..!

இந்த தீர்ப்பால் மனமுடைந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோர் செய்வதறியாது திகைத்து, பின்னர் ஜூன் 25ஆம் தேதி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Also Read  தினமலர் VS பாஜக! செய்தியை நீக்கிய தினமலர்! ரூ.100 கோடி கேட்கும் பாஜக!

மேலும் மருத்துவ சோதனைக்கு பின் வழங்கப்படும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

Tamil Mint

கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு

Tamil Mint

இன்றளவும் பிரமிக்க வைக்கும் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் – 37 ஆண்டுகால நினைவை கொண்டாடும் ரசிகர்கள்

sathya suganthi

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மவுனத்தை கலைக்கும் நடிகை

Tamil Mint

வரதட்சணை கொடுமையால் உயிரை விட்ட விஸ்மயா…! கேரள பெண்கள் எடுத்த அதிரடி முடிவு…!

sathya suganthi

புது வைரஸ், உஷார்! உஷார்!!

Tamil Mint

இந்தியா: கொரோனா பாதிப்பு 1,00,00,000-யை தாண்டியது!

Tamil Mint