கொரோனா மாதா – கோயில் அமைத்தவர் கைது! காரணம் இதுதான்!


உத்தரபிரதேச கிராமத்தில் கொரோனா மாதா என்னும் பெயரில் புதிய கோயில் ஒன்று மரத்தடியில் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் மூடநம்பிக்கையைப் பரப்ப முயன்றதாக சிலையை கைப்பற்றி அமைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் ஜுஹி ஷுகுல்பூர் என்ற கிராமத்தில் 3 பேர் கொரோனாவால் பலியாகினர். மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டது.

இதனால் மிகவும் அஞ்சி அக்கிராமவாசிகள் கொரோனாவில் இருந்து தப்பிக்க கடவுளை கும்பிட்டால் விலக்கு பெறலாம் என நம்பினர்.

Also Read  மருமகளா? மகளா? - அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

இதற்காக நான்கு தினங்களுக்கு முன் கொரோனா மாதா எனும் பெயரில் ஒரு சிறிய சிலை செய்தனர. அதை கிராமத்தின் ஒரு வேப்பமரத்தடியில் சுவர் எழுப்பி பொருத்தி வைத்துக் கும்பிட துவங்கினர்.

இதைப் பற்றி கேள்விப்பட்டு அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து வணங்க தொடங்கினர்.

இந்த கொரோனா மாதாவை வணங்குவதால் தமக்கு அந்த தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் எனவும் நம்பினர். பெண் தெய்வமாக அமைத்த சிலைக்கும் கொரோனா பாதுகாப்பிற்காக முக கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.

பூஜைக்கு வந்தவர்களுக்கும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் இப்புதிய கோயிலின் மூலம் பொதுமக்களிடையே மூடநம்பிக்கைகள் வளர்வதாகவும் புகார் கிளம்பியது.

Also Read  உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

இதை கேள்விப்பட்ட மாவட்ட நிர்வாகம் கோயிலை அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவு கிராமத்திற்கு வந்த போலீசார் கோவிலை இடித்து சிலையை கைப்பற்றினர்.

சிலையுடன் கோயிலை அமைத்ததாக ஜுஹி ஷுகுல்பூரை சேர்ந்த ஒருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

Also Read  இன்றளவும் பிரமிக்க வைக்கும் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் - 37 ஆண்டுகால நினைவை கொண்டாடும் ரசிகர்கள்

இவர் மீது சட்டவிரோதமாக கோயில் கட்டியது, பொதுமக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்த்தது போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நடவடிக்கையால் இதுபோன்ற கோயிலை அமைக்க திட்டமிட்ட மற்ற கிராமவாசிகள் அப்பணிகளை நிறுத்தியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2ம் அலைக்கு 269 மருத்துவர்கள் பலி…! ஐ.எம்.ஏ வெளியிட்ட ரிப்போர்ட்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

புதிய PF விதி – இதை செய்யாவிட்டால் இந்த மாதத்தில் இருந்து பணம் வராது..!

Lekha Shree

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட லஞ்சம்! – கர்நாடகாவில் அவலம்

Shanmugapriya

16 அரசு மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா… காரணம் இதுதான்!

Lekha Shree

மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

Jaya Thilagan

திருப்பதி தேவஸ்தானத்தின் பலே யோசனை – துளசி விதை பையில் லட்டு பிரசாதம்!

Jaya Thilagan

இன்றைய கொரோனா அப்டேட் – ஒரே நாளில் 4,092 பேர் பலி…!

sathya suganthi

வரிந்துக் கட்டிக்கொண்டு சலுகைகளை வழங்கும் ஏர்டேல், ஜியோ மற்றும் வோடபோன்…..

Tamil Mint

அமித்ஷாவை காணவில்லை – டெல்லி போலீசில் புகார்

sathya suganthi