a

உதவி செய்ய யாரும் இல்லை” – கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு நடத்திய காவலர்!


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு நடத்தியுள்ளார் டெல்லியை சேர்ந்த காவலர் ஒருவர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது.

Also Read  எடுத்துக்காட்டாக விளங்கும் கேரளா! - கரோனா தடுப்பூசிக்காக ₹800 நிதி உதவி செய்யும் மக்கள்!

இந்த நிலையில், டெல்லியின் கோகுல்புரி பகுதியை சேர்ந்த சோனு குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். அவர் தன் வயதான தாய், மனைவி மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்ததால் அவர்களுக்கு உதவி புரிய யாரும் இல்லை.

எனினும் அவர்கள் இறந்தவரின் உடலை முதல் மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். அவர்களது வீட்டிற்கு இருகில் இருக்கும் பலர் மனைவியையும் குழந்தையையும் இறந்தவரின் உடலை தொடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read  உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

இதனை அடுத்து காவல்துறைக்கு அழைத்து உதவி கேட்டுள்ளனர் உயிரிழந்தவரின் குடும்பத்தினர்.

பின்னர் அப்பகுதிக்கு சென்ற சுஷில் குமார் என்ற காவலர் இறந்தவரின் உடலை எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார். அந்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read  தமிழகத்தில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு? என்னென்ன கட்டுப்பாடுகள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா…? அமைச்சர் விளக்கம்…!

Devaraj

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் அதிகப்படுத்தப்படும் படுக்கைகள்!

Jaya Thilagan

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

Devaraj

அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்…!

Devaraj

“நான் சொல்லும்படி திருமணம் நடத்தினால் இரவு விருந்து” – மணமக்களுக்கு காவலர் வினோத பரிசு!

Shanmugapriya

“கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

Ramya Tamil

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree

குறைந்த விலையில் தரமான ஆக்சிஜன் செறிவூட்டிகள்! – இஸ்ரோ அசத்தல்!

Shanmugapriya

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இந்த டெஸ்ட்களை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்தல்…!

Jaya Thilagan