கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கு – கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!


கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த 2020ம் ஆண்டு மே 7ஆம் தேதி கருநாகத்தை கடிக்க வைத்து உத்ரா என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் சூரஜுக்கு 17 ஆண்டு கடுங்காவல், இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது கொல்லம் நீதிமன்றம்.

கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா என்ற இளம்பெண்ணை அவரின் கணவர் சூரஜ் கருநாக பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read  ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

முதலில் தனது வீட்டில் வைத்து சூரஜ் பாம்பை விட்டு உத்ராவை கடிக்க வைத்துள்ளார். அதன் பின்னர் தனது தாய் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த உத்ராவின் வீட்டிற்கு கடந்த மே மாதம் 7ஆம் தேதி சென்ற சூரஜ் அவருக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர், நள்ளிரவு நேரத்தில் தான் பாட்டிலில் கொண்டு வந்திருந்த கருநாக பாம்பை திறந்து மனைவி மீது போட்டுள்ளார். அந்த பாம்பு 2 முறை கடித்ததில் பரிதாபமாக உத்ரா உயிர் இழந்தார்.

Also Read  "சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்" - சிபிசிஐடி

இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பணம் மற்றும் நகைகளை அபகரிக்க பாம்பை விட்டு மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் சூரஜ்.

இந்த வழக்கில் உத்ராவின் மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து புனலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read  பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

அதைத்தொடர்ந்து சூரஜ் குற்றவாளி என அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனைவியின் சொத்துக்களை அபகரிக்க அவரை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த சூரஜுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சூரஜுக்கு 17 ஆண்டு கடுங்காவல், இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது கொல்லம் நீதிமன்றம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு – தி.மு.க. எம்.பி. ரமேஷை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்?

Lekha Shree

`ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சேவை இந்த நாட்களில் இயங்காது’

Tamil Mint

மது அருந்தி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை! – ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya

“என் மகன் நிரபராதி; திமுக ஆட்சியில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” – ராம்குமார் அப்பா கண்ணீர்..!

Lekha Shree

விடாது பொழியும் தொடர் மழை… தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகர் டெல்லி..!

Lekha Shree

சாதியை குறிப்பிட்டு இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாவை திட்டியவர் கைது!

suma lekha

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

Tamil Mint

ராகுல், பிரியங்காவுக்கு லக்கிம்பூர் செல்ல உ.பி. அரசு அனுமதி..!

Lekha Shree

கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

Tamil Mint

கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

Lekha Shree