பாஜக எம்.எல்.ஏவை மேடையில் அறைந்த விவசாயி? உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு..!


உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அமர்ந்திருந்த பாஜக எம்எல்ஏ தலையில் விவசாயி ஒருவர் அறைவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ஆனால், விவசாயி தன்னை அடிக்கவில்லை அன்பாகத்தான் தடவினார் என்று எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கடந்த 5ம் தேதி பாஜகவின் மூத்த தலைவர் கல்யாண் சிங் பிறந்தநாளை முன்னிட்டு உன்னாவ் நகரில் ஒரு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இதையொட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா என்பவரும் கலந்து கொண்டார். அவர் மேடையில் அமர்ந்து பேச்சாளர்களின் பேச்சை கொண்டிருந்த போது ஒரு வயதான விவசாயி கையில் கம்பு ஊன்றியபடி தட்டுத்தடுமாறி மேடைக்கு வந்தார்.

Also Read  சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கம் - மத்திய அரசு

பின்னர், அவர் திடீரென பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தாவின் தலையில் அறைந்தார். திடீரென அந்த முதியவர் வந்து அடித்ததால் பங்கஜ் குப்தா அதிர்ச்சியாகி விட்டார்.

உடனடியாக விரைந்து வந்த கட்சியினர் அந்த விவசாயி மேடையிலிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ காட்சி வேகமாக வைரலானது.

இந்த சம்பவம் குறித்து உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, “பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் எம்எல்ஏவை அறைந்துள்ளார்.

அவர் மீது விழுந்து அடி எம்எல்ஏ மீதான கோபத்தில் அல்ல பாஜக தலைமையிலான யோகி அரசின் மோசமான கொள்கை ஆட்சிக்கு விழுந்த அடி” என விமர்சனம் செய்துள்ளது.

Also Read  கடைசி போட்டியில் கலக்கிய இந்தியா: நமீபியாவை நச்சுனு அடிச்சி அசத்தல் வெற்றி.!

ஆனால் இந்த விவகாரம் குறித்து உடனடியாக எம்எல்ஏ விளக்கமளித்தார். சம்பந்தப்பட்ட விவசாயியை தன்னுடன் அமர வைத்துக் கொண்டு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது எம்எல்ஏ பங்கஜ் குப்தா கூறுகையில், “விவசாயி என்னை அடிக்கவில்லை. பாசமாக தான் தலையில் தடவினார். அது அடித்ததுபோல தெரிந்து விட்டது” என்று விளக்கம் அளித்தார்.

Also Read  "இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது" - உலக சுகாதார அமைப்பு

விவசாயி இதுகுறித்துக் கூறுகையில், “நான் அவரை அடிக்கவில்லை. அருகில் வந்து பேசத்தான் முயன்றேன். தலையை தடவிக் கொடுக்க முயன்றபோது அது தவறுதலாக கைப்பட்டுவிட்டது. எம்எல்ஏ எனக்கு மகன் போல” என்று சிரித்தபடி கூறினார்.

தொடர்ந்து பேசிய எம்எல்ஏ, “எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலையே இல்லை. எந்த பிரச்சினையும் இல்லை. விவசாயி அடித்துவிட்டதாக இப்போது பேசிக் கொண்டு உள்ளனர். இவர் எனக்கு அப்பா மாதிரி.

இதேபோல் என்னை முன்பும்கூட தடவியுள்ளார். இதெல்லாம் ஒரு பிரச்சினையா?” என்று சிரித்தபடியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தங்கத்தை பேஸ்டாக பேண்டில் தடவி கடத்தல்.!

suma lekha

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: கடும் கோபத்தில் ராகுல்

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

நிபா வைரசால் சிறுவன் பலி! கொரோனாவை அடுத்து புதிய அச்சுறுத்தல்!

Lekha Shree

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

Lekha Shree

“டாஸ்மாக் வேண்டாம்” முதல் டாஸ்மாக் திறப்பு வரை! மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!

Lekha Shree

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைதான ‘பிரியாணி’ பட நடிகை…!

Lekha Shree

“சீனாவின் கைப்பாவை…. டிக் டாக் செயலியைப் போல ட்விட்டரும் தடை செய்யப்படும்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

கொரோனா 2 அலைகளும் ஒன்றுக்கொன்று சலைச்சது இல்லை – மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்கள்

Devaraj