உ.பி. முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தியா? பாஜகவுக்கு டஃப் கொடுப்பாரா?


உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை பொறுத்தவரை யோகி ஆதித்யநாத் தான் முதலமைச்சர் வேட்பாளர் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிப்பு வெளியாகாத நிலையில், பிரியங்கா காந்தி தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக மிகப்பெரிய அளவில் வியூகம் அமைத்து வருகிறது.

அதே போல காங்கிரஸ் கட்சியும் இழந்த செல்வாக்கை மீட்கவும் வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் உத்திரபிரதேசத்தின் வெற்றியை மிக முக்கியமான கருதுகின்றனர்.

அதற்காக இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர் உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை பிரியங்கா காந்தி தொடர்ந்து யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

Also Read  24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! - உச்சம் தொட்ட FAU-G கேம்!

தேர்தல் பணிகளளை தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சியினர் எப்படி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது குறித்து தேசிய அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது .

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியை அடுத்து கட்சி அமைப்புகளை சீரமைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

சமீபத்தில் கூட அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி காங்கிரஸ் கட்சிக்கு மேஜர் சர்ஜரி தேவை என தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் காங்கிரஸில் உள்ள தலைவர்கள் சிலர் அடுத்தடுத்த பாஜகவுக்கும் தாவி வருகின்றனர்.

Also Read  'முதலமைச்சர்' மு.க.ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்!

சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸின் முக்கிய முகமாக இருந்த அஜீத் பிரசாத் பாஜகவில் இணைந்தார். தலைவர்களின் இந்த கட்சி தாவல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஒரு கஷ்டத்தை கொடுத்து வந்தது.

இதனையடுத்து சோனியா காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. இந் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது உத்திரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பாஜகவுக்க காங்கிரஸ் மிகப்பெரிய சவாலாக உருவாகும் என்றும் கூட்டணிக்காக காத்திருக்காமல் சொந்த பலத்தை கொண்டு தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் போராட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை கட்சியை வழிநடத்தும் கேப்டனாக பிரியங்கா காந்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  ஐந்து நிமிட இடைவெளியில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்! வெளியான பகீர் தகவல்!

அவரிடம் பிரியங்கா காந்தி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரியங்கா காந்தி எங்களுக்கு ஒரு அறிகுறி கொடுக்காதவரை அதற்கான பதிலை நான் சொல்லப்போவது இல்லை என்றும் பிரியங்கா காந்தி ஒரு அற்புதமான சிறந்த முகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பலரும் உத்திரபிரதேசத்தில் அடுத்த தேர்தலில் பிரியங்கா காந்தி தான் முதலமைச்சர் வேட்பாளர் என கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளே பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது பாஜக.

அதனால் இந்த முறை அப்படி கோட்டை விடாமல், கோட்டையை பிடிக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தி முன்னிறுத்தப்படுவாரா என்பவதை இன்னும் சில வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

sathya suganthi

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடக்கம்!

Tamil Mint

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்பு… அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Tamil Mint

ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

sathya suganthi

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்…!

sathya suganthi

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்! – சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

Shanmugapriya

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree