a

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!


நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தால், கைகளை கழுவுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிலும் வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லையென்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படுமென பல்வேறு மாநிலங்களும் அறிவித்துள்ளன.

இதற்கிடையே பொதுமக்கள் வித்தியாசமான யோசனைகள் அவ்வப்போது வெளிகொண்டுவந்து பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றனர்.

பழைய குளிர்சாதனப் பெட்டியை கிருமி நாசினியாக மாற்றுவது, பறவையின் கூட்டை மாஸ்க் ஆக அணிவது போன்றவை இணையத்தில் வைரல் ஆனது.

Also Read  `ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சேவை இந்த நாட்களில் இயங்காது’

அந்த வரிசையில் ஒரு புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியின் ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு சாமியார் தனித்துவமான முகக்கவசம் ஒன்றை அணிந்து உள்ளார். அந்த முககவசம் வேம்பு இலை மற்றும் துளசி இலைகளால் ஆனது. இரண்டையும் ஒன்று சேர்த்து மிகவும் வித்தியாசமான முகக்கவசம் தயாரித்துள்ளார்.

அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அந்த சாமியார் இரண்டு மூலிகைகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.

Also Read  "நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல" - மருத்துவர்

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது. சிலர் இது ஆயுர்வேத முகக்கவசம் என்றாலும் தற்போதைய கொரோனா சூழலை கட்டுப்படுத்த உதவாது என கமெண்ட் செய்து வருகின்றனர். மறுபக்கம் இந்த முகக்கவசம் ஒரு மூலிகை, மக்கும் தன்மை கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த முகக்கவசம் என கமெண்ட் செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதன்முறையாக ரூ.1.23 லட்சம் கோடியை தொட்ட ஜி.எஸ்.டி. வசூல் – கடந்தாண்டை விட 27% அதிகம்…!

Devaraj

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்

Tamil Mint

கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

Tamil Mint

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

Tamil Mint

மே 20-ல் மீண்டும் கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்….

Ramya Tamil

டெல்லியில் மேலும் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

sathya suganthi

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tamil Mint

“சீனாவின் கைப்பாவை…. டிக் டாக் செயலியைப் போல ட்விட்டரும் தடை செய்யப்படும்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

பயன்பாட்டில் இல்லாத கொக்கோ கோலா ஆலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய கேரளா!

Shanmugapriya

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பின்தான் தடுப்பூசி – மத்திய அரசு

sathya suganthi