சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது


அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சீனாவில் இருந்து அபுதாபிக்கு தடுப்பூசி மருந்துகள் கொண்டு வர அபுதாபியில் எதிகாத் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777-300 இ.ஆர். என்ற சரக்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விமானத்தில் வெப்பநிலையை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Also Read  தாஜ்மகால், செங்கோட்டை ரீ ஓபன்…! சுற்றுலா தலங்களுக்கு நாளை முதல் அனுமதி

சீனாவின் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொத்தம் 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டு அபுதாபிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி துறைமுகத்தில் உள்ள கிசாட் குளிரூட்டப்பட்ட சேமிப்பு மையத்தில் அந்த மருந்துகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட உள்ளது. இந்த கொரோனா தடுப்பு மருந்தை அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு ஹோப் கன்சோர்டியம் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அந்த குளிரூட்டும் சேமிப்பு மையத்தில் பராமரிக்கப்படும் மருந்துகள் தேவைக்கேற்ப நாடு முழுவதும் வினியோகம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 2 கட்டமாக போடப்படும் தடுப்பூசி மருந்துகள் சீனாவில் இருந்து அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு உதவியாக இருந்த தனியார்துறை நிறுவனங்களுக்கு பாராட்டையும் நன்றியும் தெரிவிப்பதாக அபுதாபி சுகாதாரத்துறை தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகம்மது அல் ஹமத் கூறினார் என்று ஆன்லைன் செய்தி நிறுவனமான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read  நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காததால் அக்கம் பக்கத்தினரை தாக்கிய நபர்!

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்…!

Devaraj

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி

Tamil Mint

மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!

Lekha Shree

“இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைக்கும்” – போலீசுக்கு ஷாக் கொடுத்த கும்பல்!

Lekha Shree

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? – ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

Devaraj

ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி… தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலரின் மரணத்தால் அதிர்ச்சி… முழு விவரம் இதோ!

Tamil Mint

பச்சை நிறத்தில் மாறிய கங்கை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Lekha Shree

2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

Tamil Mint

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

Lekha Shree

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,775 பேர் குணமடைந்துள்ளனர்

Tamil Mint