‘வலிமை அப்டேட்’ தாமதத்திற்கு இதுதான் காரணம்?


நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வினோத்-அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்தது.

கடந்த 2019ம் ஆண்டே ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. பின்னர் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனால், இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் நீண்ட நாட்களாக காத்திருந்த அஜித் ரசிகர்கள் பொறுமை இழந்து எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர்.

இதனால் வருத்தமடைந்த அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கட்டுப்படுத்தினார். அதன்பின்னர் அமைதி காத்த ரசிகர்கள் மீண்டும் தங்களின் சேட்டையை ஆரம்பித்தனர்.

Also Read  பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்!

இங்கிலாந்தில் நடைபெற்ற வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட தமிழக வீரர் அஷ்வினிடம் மீண்டும் வலிமை அப்டேட் கேட்டனர். இது மீண்டும் பரபரப்பை கிளப்பியது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.

Also Read  'மாயவன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பில் உள்ள வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வலிமை அப்டேட் தாமதத்திற்கு வலுவான காரணம் உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. திரைப்படத்தின் வெளியீட்டு தேதியுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

எனவே, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சரியான நேரத்திற்காக தயாரிப்பாளர் பொறுமை காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை அப்டேட் அஜித் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக அமையப் போவதாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தல அஜித்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால், வலிமை அப்டேட் உலகளவில் ட்ரெண்ட் ஆகும் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல முன்னனி ஹீரோ படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மோகன் ராஜா?

Lekha Shree

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரஷ்மிகா மந்தனா! பலரும் பார்த்திராத கியூட் வீடியோ இதோ..

Jaya Thilagan

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்; கடுப்பான அஜித் வெளியிட்ட அறிக்கை!

Tamil Mint

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

‘சூர்யா 40’ – செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்..!

Lekha Shree

‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம்…!

Lekha Shree

காதல் படம் இயக்கவுள்ள பா.ரஞ்சித்! தலைப்பு இதுதான்..! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

‘தப்பு பண்ணிட்டேன்’ – யுவன்-சிம்பு காம்போவில் உருவாகியிருக்கும் பாடலின் டீசர் வெளியீடு!

Lekha Shree

சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

HariHara Suthan

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இந்த டாப் ஹீரோக்களா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree