இன்று வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!


அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்று பலன் கிடைத்துவிட்டதால் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வலிமை குறித்த ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Also Read  ஜூலை 15ம் தேதி வெளியாகிறதா 'வலிமை' பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

நேர்கொண்ட பார்வை படத்தின் மெகா வெற்றிக்கு பின்னர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ‘காலா’ பட நடிகை ஹுமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அஜித் இந்த படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படம் தொடங்கி வெறும் டைட்டில் மட்டுமே வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் பார்க்கும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு சேட்டை செய்தனர்.

Also Read  பர்த்டே பேபி 'பவித்ரா' வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல இடங்களிலும் பல பேரிடமும் வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டு மிரளவைத்தனர்.

இதன் பிறகு அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரிய நேரத்தில் அப்டேட் வரும் என கூறி ரசிகர்களை அமைதி காக்க சொன்னார்.

Also Read  இயக்குனர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் ஜீவாவின் உருக்கமான பதிவு…!

பின்னர் சில தினங்களுக்கு ரசிகர்களும் அமைதி காத்தனர். ஆனால், இப்பொழுது சாமியார், ட்விட்டர் என மீண்டும் வலிமை அப்டேட் கேட்க துவங்கினர்.

அந்தவகையில் யூரோ கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்திலும் ஒரு ரசிகர் வலிமை அப்டேட் என பேப்பரில் எழுதி காட்டியுள்ள புகைப்படம் வைரல் ஆகியது.

அஜித்தின் ‘வலிமை’ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தலால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாகியது.

இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்று பலன் கிடைத்துவிட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

30 புகைப்படங்கள்… 30,00,000 மகிழ்ச்சியான நினைவுகள்… இணையத்தை கலக்கிய காஜல் அகர்வால்…!

sathya suganthi

தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா நடிகர் காளிதாசுக்கு எழுதிய கடிதம்…!

Lekha Shree

பிரபல தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு…! வைரலாகும் புகைப்படம்…!

Devaraj

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint

விருதுகளை குவிக்கும் ஆர்யாவின் ‘மகாமுனி’…!

Lekha Shree

மணி ரத்னத்துக்கு பிறந்த நாள்…! வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…!

sathya suganthi

மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

sathya suganthi

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

Lekha Shree

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து இசையமைப்பாளர் அனிரூத்தை நீக்கிய பிரபல இயக்குனர்கள்…

VIGNESH PERUMAL

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது… ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

Tamil Mint

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Lekha Shree