அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…!


கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படம் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின், ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Also Read  பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

ஆனால், ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தின் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது.

மேலும், தற்போது இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read  "இது மனித நாகரிகத்தின் உச்சம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

இதனால், இந்திய அளவில் வெளியாக இருந்த ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம் போன்ற தெலுங்கு திரைப்படங்களில் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன.

ஆனால் பொங்கல் பண்டிகைக்கு தமிழில் வெளியாகும் வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்தார்.

Also Read  'ஏ ராசா' - மாமனிதன் படத்தின் 2வது பாடல் வெளியானது..!

இருந்தாலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட்டில் கால்பதிக்கும் இசையமைப்பாளர் அனிருத்?

Lekha Shree

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

Lekha Shree

கமலுடன் செல்ஃபி எடுத்த பகத் பாசில்! – சூடுபிடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு…!

Lekha Shree

பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபல யூடியூபர்கள் கோபி-சுதாகர்…! நடந்தது என்ன?

Lekha Shree

Twitter Spaces-ல் தனுஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

‘பீஸ்ட்’ அப்டேட் கொடுத்துள்ள இயக்குனர் நெல்சன் திலீப்குமார்…!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என மறுத்த சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

நாகசைதன்யாவின் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத சமந்தா… விவாகரத்து உறுதியா?

suma lekha