உலக அரங்கில் ஒலித்த ‘வலிமை’ அப்டேட்… மீண்டும் களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்..!


அஜித்தின் ‘வலிமை’ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தலால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாகியுள்ளது.

தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வலிமையின் பர்ஸ்ட் லுக்கிற்காக காத்திருக்கிறார்கள். மேலும், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக வலிமை அப்டேட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை படத்தின் மெகா வெற்றிக்கு பின்னர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ‘காலா’ பட நடிகை ஹுமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Also Read  நடிகர் தனுஷுக்கு மீதமுள்ள வரியை செலுத்த உயர்நீதிமன்றம் கெடு..!

அஜித் இந்த படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படம் தொடங்கி வெறும் டைட்டில் மட்டுமே வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் பார்க்கும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு சேட்டை செய்தனர்.

Also Read  விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி... வைரல் வீடியோ...!

அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல இடங்களிலும் பல பேரிடமும் வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டு மிரளவைத்தனர்.

இதன் பிறகு அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரிய நேரத்தில் அப்டேட் வரும் என கூறி ரசிகர்களை அமைதி காக்க சொன்னார்.

பின்னர் சில தினங்களுக்கு ரசிகர்களும் அமைதி காத்தனர். ஆனால், இப்பொழுது சாமியார், ட்விட்டர் என மீண்டும் வலிமை அப்டேட் கேட்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், யூரோ கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்திலும் ஒரு ரசிகர் வலிமை அப்டேட் என பேப்பரில் எழுதி காட்டியுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Also Read  'தளபதி' பட ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய மம்மூட்டி…!

இதன் காரணமாக அஜித் ரசிகர்களின் ‘வலிமை’ குரல் உலக அரங்கில் ஒலித்துள்ளது. படக்குழுவினர் விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிடுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“என்னை கேலி பேசுவது நடிப்புத் தொழிலை சிறுமை படுத்துவதாக உள்ளது!” – விஷ்ணு விஷால்

Tamil Mint

கலக்கப்போவது யாரு பிரபலம் குரலில் யோகிபாபுவின் மண்டேலா பட பாடல் வெளியீடு…!

HariHara Suthan

வெளியீட்டிற்கு முன்னரே ரூ.200 கோடி வசூல் செய்த அஜித்தின் ‘வலிமை’?

Lekha Shree

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

பூஜையுடன் துவங்கிய நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு…!

Lekha Shree

‘கர்ணன்’ பட டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு…! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த நடிகர் தனுஷூக்கு உத்தரவு!

Lekha Shree

தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

Lekha Shree

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

வைரலான அஸ்வின்-சிவாங்கி திருமண வீடியோ – பதறியடித்து விளக்கம் அளித்த இளசுகள்…!

sathya suganthi