BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகிய வனிதா: இதுதான் காரணம்!


பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள நடிகை வனிதா, மோதல் காரணமாக வெளியேற இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா. பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கேற்று வருகிறார்.

Also Read  வெண்கலம் வெல்வாரா பி.வி. சிந்து: அரையிறுதிக்குள் நுழையுமா இந்திய ஹாக்கி அணி.?

இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வனிதா அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்னை அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரபல தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.

Also Read  "அயன் " படத்தை போன்று நூதன முறையில் திருட்டு... சுங்கத்துறையின் அதிரடி கைது....

தொலைக்காட்சி நிறுவனத்தோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டது. பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள்.

Also Read  வினோத திருட்டு.... மணப்பெண் செய்த செயல்... அதிர்ச்சியடைந்த மணமகனின் வீட்டார்....

பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் அறிவித்துள்ளார் .

Tamil Mint

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்..!

suma lekha

நடிகர் விஜய் ரீல் அப்பாவுக்கு கொரோனா…!

VIGNESH PERUMAL

கடுமையான ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ramya Tamil

இன்றைய ஐ.பி. எல் தொடரில் டெல்லி அணி வென்றது

Tamil Mint

சினிமா பாணியில் கணவனைக் கொன்ற மனைவி… வியூகம் வகுத்தது யார்…?

VIGNESH PERUMAL

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: இந்திய ராணுவம் அதிரடி

mani maran

மனைவி மற்றும் 3 மகள்கள் மீது சந்தேகம்…. முதியவர் செய்த வெறிச்செயல்….

Devaraj

இந்தியாவில் இருந்து வரவோருக்கு தடை விதித்தது அமெரிக்கா!

Shanmugapriya

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…

VIGNESH PERUMAL

கலெக்டரை சற்று பதறவைக்கும் செயல்… “எதார்த்த சண்டைக்கே தீக்குளிக்க முயற்சியா”….!

VIGNESH PERUMAL

இப்படியும் ஒரு நண்பனா…? புகைப்படங்கள் வைத்து மிரட்டல்…. போலீஸ் கைது…

VIGNESH PERUMAL