விஜய் டிவியில் இருந்து வெளியேறிய வனிதா… யார் காரணம்?


நடிகை வனிதா விஜயகுமார் திடீரென விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்கு பாராட்டும் ஆதரவும் தந்த அனைவருக்கும் எனது நன்றி. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியேறுகிறேன்.

நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை துன்புறுத்துவதை ஏற்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவி எனது குடும்பம் ஆகிவிட்டது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.

Also Read  ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா - கொந்தளித்த கார்த்தி!

எங்களுக்குள் நல்ல மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் பணி செய்யும் இடத்தில் தொழில்முறை அல்லது நெறிமுறையற்ற நடவடிக்கைகளை ஏற்கவே முடியாது.

ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டதோடு அவமானப்படுத்தப்பட்டேன். இதற்கு அவரது திமிர் காரணமாக இருக்கலாம் அல்லது அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியாமல் இருக்கலாம்.

வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை. பெண்களும் தான் மோசமாக நடத்துகின்றனர். பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை நாசம் ஆக்குகின்றனர்.

இருப்பினும் நான் என் திரைப்பட வேலைகளில் பிசியாக இருப்பதால் தொடர்ந்து நீங்கள் என்னை திரைப்படங்களில் பார்க்கலாம்.

Also Read  நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் சிம்ரன்?

என்னை விட எல்லா விதத்திலும் மூத்த நபர் கடுமையாக உழைத்து முன்னேறியவர், முன்னேற கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இளைஞர்களை கீழமையாக பார்ப்பதும் அவர்களது வெற்றியை கெடுத்து அவமானப்படுத்துவதும் பார்க்க வேதனையாக இருக்கிறது.

குறிப்பாக நீண்ட நாட்கள் போராட்டத்துக்குப் பின் குடும்பத்தின் கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும் வெற்றி காணும் மூன்று குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார்.

பெண்கள் சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்கள் வாழ்க்கையை மோசமாக மாற்றக்கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை ஜோடிகளுக்கும் வாழ்த்துக்கள்.

Also Read  ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

வெற்றி மட்டுமே முக்கியமல்ல. போட்டியில் பங்கேற்று சவாலை ஏற்பதே மிக முக்கியம். சுரேஷ் சக்ரவர்த்தி என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு எது சரியோ அதைச் செய்தாக வேண்டும். என்னால் நீங்களும் இந்த நிகழ்ச்சியை விட்டு நீங்க வேண்டியதாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் ஒரு மூத்த பெண் கலைஞரால் தான் வெளியேறுவதாக வனிதா குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி செய்த மாங்காய் ஊறுகாய்… யூடியூபில் ட்ரெண்டிங்..!

Lekha Shree

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

இணையத்தில் வைரலாகும் ‘குட்டி தல’ புகைப்படம்! – கியூட் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

கவிப்பேரரசுக்கு கேரளாவின் ஓஎன்வி விருது… கடும் எதிர்ப்பு தெரிவித்த ‘மரியான்’ நடிகை!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… தயாரிப்பாளரின் பதில்..!

Lekha Shree

பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் இவரா?… பாலாஜி முருகதாஸால் வைரலாகும் வீடியோ…!

Tamil Mint

“ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!” – நடிகர் தனுஷ் இரங்கல்

Lekha Shree

ரிலீஸுக்கு தயாராகும் ‘குக் வித் கோமாளி’ பிரபலத்தின் திரைப்படம்…!

Lekha Shree

’மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை நீக்கியது கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’

Tamil Mint