வாகனங்களில் பம்பர்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு


அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்பட்டிருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நான்கு சக்கர வாகனங்களின் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த மத்திய அரசும் தடை விதித்தது. 

Also Read  ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 'விடியல் எப்போது ஸ்டாலின்' ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்!

மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இது போன்ற தடை செய்யப்பட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ஆட்டோக்களில் வெளியே பொருத்தப்பட வேண்டிய கண்ணாடிகள் வாகனத்தின் உள்ளே பொருத்தப்படுவது,  விதிகளை மீறி வாகனங்களின் முகப்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது மற்றும் விதிகளை மீறும் வகையில் நம்பர் ப்ளேட்கள் வைப்பது உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது போன்ற விதிகளை மீறிய வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Also Read  கொண்டாட்டங்களை காண யாரும் நேரில் வராதீங்க: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.!

அரசு இயற்றும் சட்டங்களை நீதிமன்ற உத்தரவு மூலமாக மட்டுமே  செயல்படுத்த வேண்டிய நிலை தொடர்வதாக புகார் தெரிவித்த நீதிபதிகள்,

இந்த வழக்கில் தாமாக முன் வந்து தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து ஜனவரி 28 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்கள்.

Also Read  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பு பணிகளுக்கு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30 கோடி நிதி

sathya suganthi

திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி-தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tamil Mint

தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்…!

Lekha Shree

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்..!

suma lekha

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் ஸ்டெர்லைட்

Tamil Mint

மெரினா கடற்கரையை விரைவில் திறக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? – ஜெயக்குமார் விமர்சனம்..!

Lekha Shree

கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை – கல்வித்துறை அதிரடி!

Lekha Shree

சென்னைக்கு வருபவர்களுக்கு செக், மாநகராட்சி நடவடிக்கை

Tamil Mint

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி

Tamil Mint