வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…!


வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வாத்தியாராக விஜய் சேதுபதி என்றும், கதை நாயகனாக சூரி என்றும் குறிப்பிடப்பட்டது. சூரி இதில் காவல்துறை உடையில் புதிய கெட்டப்பில் காணப்பட்டார்.

வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இயக்கும் படம் இது என்பதாலும் முதல்முறையாக சூரி மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளதாலும் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இளையராஜா இந்த படத்திற்காக இசையமைக்க உள்ளார். எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ். இன்போடெய்ன்மெண்ட் பேனரின் கீழ் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

Also Read  'பீஸ்ட்' படத்திற்காக களத்தில் இறங்கிய நாயகி பூஜா ஹெக்டே…!

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திரையுலகினர் படப்பிடிப்பில் முழுவீச்சுடன் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் இப்படத்தின் சில காட்சிகள் செங்கல்பட்டில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை...

மேலும், இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது – அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

HariHara Suthan

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்!

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5 குறித்த சூப்பர் அப்டேட் இதோ..!

Lekha Shree

குழந்தைகளுடன் ஜாலியாக விளையாட நடிகர் அல்லு அர்ஜுன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

‘சீயான் 60’ – முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

Lekha Shree

விஜய் 65ன் கதை இது தானா? ரசிகர்கள் குஷி..!

HariHara Suthan

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

HariHara Suthan

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint