நடுரோட்டில் குழந்தையை கூவி கூவி விற்ற தந்தை..! – வைரலாகி வரும் வீடியோ..!


பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தான் பெற்ற குழந்தையையே நடுரோட்டில் கூவி கூவி விற்க முயன்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் கோத்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிசார் லஸ்ஹாரி. இவர் அந்நாட்டில் உள்ள சிறைத்துறை போலீஸாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனது மூத்த மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவனுக்கு ஆப்ரேஷன் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

Also Read  காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் - அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

அப்பொழுது அவர் தன் மகனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு உயர் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே விடுமுறை வழங்குவேன் என்று கூறியுள்ளனர். இவர் லஞ்சம் வழங்க மறுத்ததால் இவருக்கு விடுமுறையும் வழங்காமல் இவரை லார்கானா என் பகுதிக்கு பணி மாற்றமும் செய்துள்ளனர். இது அவர் இருக்கும் பகுதியிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நிசார் தனது இளைய மகனை தூக்கி அவனை விற்பனை செய்யப்போவதாக சொல்லி ரூ50 ஆயிரத்திற்கு அவனை கூவி கூவி விற்றார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Also Read  அழிந்து வரும் குகை ஓவியங்கள் - காலநிலை மாற்றம் காரணமா?

லஞ்சம் கொடுக்காத ஆத்தரத்தில் உயர் அதிகாரிகள் தண்டனை வழங்கியதாகக் கூறிய நிசார், இது குறித்து புகார் அளிக்க வேண்டும் என்றால் கராச்சி செல்ல வேண்டும் ஆனால் அதற்கு தன்னிடம் காசில்லை எனவும், தற்போது தான் தன் மகனுடன் ஆப்ரேஷனிற்காக மருத்துவமனைக்கு செல்லவா? அல்லது பணிக்காக லார்கானா செல்லவா என தெரியாமல் ஆத்திரத்தில் இதை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காலநிலை மாற்றம்: கிரெட்டா தலைமையில் பிரம்மாண்ட பேரணி…!

Lekha Shree

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

விண்வெளிக்கு சென்ற 4 பேர்..பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..!

suma lekha

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint

ஒசாமா பின்லேடன் தியாகி – இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டதாக விளக்கம்

sathya suganthi

ஊசி இருந்தா தான போடுவீங்க… கொரோனா தடுப்பூசியை திருடிய நபர்கள்…! எப்படி எல்லாம் யோசிக்குறாங்க?

Tamil Mint

குழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…!

Devaraj

அடேங்கப்பா…. இவ்வளவு நீளமா? – ஒரு மீட்டர் நீள ஷூவை தயாரித்த அடிடாஸ் நிறுவனம்!

Shanmugapriya

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு – பேக்கரியின் பலே ஐடியா…!

Devaraj

குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! – ‘மங்கி பி’ தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

Lekha Shree