விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி


இயக்குநரும் விஜயின் தந்தையுமான எஸ்ஏசி, ஒரு இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி, “நான் என் மகனுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்வேன். அவன் நன்றாக இருக்க வேண்டுமென்று 1993இல் அவருக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கினேன்.தற்போது அவர் உச்ச நட்சத்திரமாகி விட்டார் .அதனால் அவர் எனக்கு பிள்ளை என்று ஆகிவிடாது. அவரை நான் இன்னமும் குழந்தையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதை நான் அவரது நல்லதாகவே செய்துள்ளேன். 

அதை அவர் விரைவில் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். தனது ரசிகர்களை நான் தொடங்கியுள்ள கட்சியில் சேர வேண்டாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அப்பா அவரது நல்லதுக்குதான் செய்தார் என்பதை அவர் புரிந்து கொள்வார். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம். நான் பொதுவாகவே விஜயிடம் ஆறு மாதத்திற்கு , மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் பேசுவேன். தற்போது அவரிடம் பேசுவது சரியாக இருக்காது. 

Also Read  பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! தமிழக அரசு அறிவிப்பு!

எனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். அதுபோல் அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதை வரலாறு தானே.

விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு. அதை இயக்கமாக மாற்றிய போது அதன் நிறுவனராக நான்தான் இருந்தேன். அதை தற்போது நான் கட்சியை அரசியல் கட்சியாக மாற்றி உள்ளேன். எனது மனைவி சோபாவுக்கு அரசியல் கட்சியில் சேர விருப்பம் இல்லை என்றால் அவர் விலகிக் கொள்ளட்டும்.

Also Read  தமிழகம்: ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!

அவருக்கு பதிலாக நான் வேறு ஒருவரை பொறுப்பாளராக போடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை வரும் பேசாமல் இருப்பது சாதாரணமானதுதான்.

விஜய் தான் என் கடவுள். அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். விஜய் என்னை விட புத்திசாலி. அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் உடையும். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியுள்ளார். அதிலிருந்து வெளியே வர வேண்டும். என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”.

Also Read  எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று - முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு  கொரோனா பரிசோதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாரிதாஸ் Vs செந்தில் பாலாஜி White Board முதல் FootBoard வரை..!ட்விட்டரில் முற்றிய வார்த்தை போர்!

Lekha Shree

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

Lekha Shree

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது!

suma lekha

தமிழகம்: கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நாட்கள் குறித்து அறிவிப்பு..!

Lekha Shree

“பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” – அமைச்சர் பாண்டியராஜன்

Shanmugapriya

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

suma lekha

மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்கலாம்.

Tamil Mint