a

தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்..! வெளியான செம்ம அப்டேட்!


நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் சென்னையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது.

Also Read  'ஜகமே தந்திரம்' பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read  மக்களுக்காக களமிறங்கிய சோனு சூட்! - நேரடியாக சந்தித்து உதவி!

இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வம்சி பைடிபல்லி விஜய் படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார்.

ஆனால், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா 2ம் அலை முடிவுக்கு வந்தபின் வெளியாகும் என்றும் இது தனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  "கவிஞனே நீ சமுத்திரம்!" - வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!

மேலும், இந்த படத்தில் உள்ள மற்ற விவரங்கள் அனைத்தும் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை அவர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…!

sathya suganthi

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்த பிரபல ஹீரோ…!

Lekha Shree

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கலக்கல் டான்ஸ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

மாப்பிள்ளை யார்?… திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜே ஜாக்குலின்…!

Tamil Mint

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

‘அந்தாதூன்’தமிழ் ரீமேக் ஷூட்டிங் ஆரம்பம்… முதல் நாளே இயக்குநர் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

malar

இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் – புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Devaraj