“மீண்டும் அண்ணா… வேண்டும் அண்ணா.. அண்ணா யாரு?” – விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!


மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளான இன்று, மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அவரது படத்திற்கு மலர் தூவியும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Also Read  'Dangal' பட நடிகையை 3-வதாக மணக்கிறாரா ஆமிர் கான்?

இதனிடைய மதுரையில் அண்ணா உருவத்தை மார்பிங் செய்து விஜய்யின் படத்தை வைத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், “நாட்டிற்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார்… பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாய் இருந்தார்… எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா… தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா… அண்ணா யாரு தளபதி” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Also Read  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் பலர் ஆர்வத்தில் உள்ளது தெரிந்த ஒன்று. அதேபோல் விஜய்யின் படங்களில் அரசியல் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்று வருவதும் அவர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

ஆனால், அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை விஜய் எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.

Also Read  தேர்தல் களத்தில் புதுவரவு - கட்சி சின்னங்களுடன் தயாராகும் முகக்கவசங்கள்

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளான இன்று, மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

Lekha Shree

ஆர்யா-அரவிந்த்சாமி இணையும் புதிய படம்..! வெளியான வேற லெவல் அப்டேட்..!

Lekha Shree

அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

அதிமுக அமைச்சர்கள் அவசர ஆலோசனை

Tamil Mint

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

கடலில் மிதந்தபடி திமுகவுக்கு வாக்கு சேகரித்த மதிமுகவினர்!

Shanmugapriya

முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா – பீதியில் அதிமுக…!

Devaraj

டாஸ்மாக் திறப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Lekha Shree

“எஸ்.பி.வேலுமணி மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி” – வானதி சீனிவாசன்

Lekha Shree

திரையரங்குகளில் இன்று முதல் மீண்டும் திறப்பு

Tamil Mint

கொரோனா: கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை உள்பட 2 பள்ளிக்கு அபராதம்…!

Devaraj

“காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்” – தமிழக அரசு

Lekha Shree