“தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை புண்படுத்தியது” – நடிகர் விஜய் வேதனை..!


இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், “தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தியுள்ளது” என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்.

அப்போது அவர் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். அதில் குறிப்பாக, “நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வரி செலுத்தவும் அபராதத்தை செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் தன்னை பற்றி எதிர்மறை கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read  டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு?

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என்று நீதிபதி கூறியிருந்தார். ஆனால் வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்துவது இல்லை என்றும் வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்து இருப்பதாகக் கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள்.

காரை கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது. இதேபோல் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சூர்யா வழக்கிலும் கருத்துக்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

சட்டவிரோதமாக இந்த வழக்கு தொடரவில்லை. வரி விலக்கு கோருவது என்பது சட்டபூர்வமான நடவடிக்கை என்பதால் தான் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

அதேபோல் சினிமாத்துறையில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் விஜய், வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

Also Read  மெகா தடுப்பூசி முகாம் - சாதனை படைத்த தமிழகம்..!

நிலுவைத் தொகையான ரூ.32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம். எனவே, நீதிபதி கூறிய கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது” என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சினேகன்-கன்னிகா ரவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்..!

Lekha Shree

ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

Tamil Mint

சமூகவலைதளங்களில் இழிவான கருத்து…! கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி புகார்…!

sathya suganthi

‘அரண்மனை 3’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…!

Lekha Shree

‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரி ரோலில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Lekha Shree

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

கிடு கிடுவென குறையும் தங்கத்தின் விலை

Tamil Mint

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் – தென்னக ரயில்வே

Lekha Shree

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை – ஆளுநர்

Tamil Mint

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்

Tamil Mint