a

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?


சோலோ யூடியூபர்ஸ் மற்றும் கார்ப்பரேட் யூடியூபர்ஸ் இடையே ஒரு போரே நடந்து வருகிறது.

கார்ப்பரேட்களின் வளர்ச்சி தனிமனிதனின் வளர்ச்சியை எப்படி தடுக்கும் என்பதற்கு இந்த பிரச்சனையே சிறப்பான சான்று.

முதலில் என்ன பிரச்சனை என்று பார்க்கலாம். விஜய் டிவி புகழ் அர்ச்சனா தனது யூடியூப் சேனலில் சில தினங்களுக்கு முன்பு பாத்ரூம் டூர் என ஒரு வீடியோ போட்டார்.

அதில் அர்ச்சனா வீட்டில் உள்ள பாத்ரூமை அவர் தனது மகளுடன் சேர்ந்து சுற்றி காட்டினார்.

பிரம்மாண்டமாக இருந்த அந்த பாத்ரூம் டூர் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்தது.

அந்த வீடியோவில் அர்ச்சனாவே இது பிரைவேட் ஸ்பேஸ்… மோசமாக கமெண்ட் செய்வார்கள் என்று சொல்லியும் இருந்தார்.

அதற்கு ஏற்றார் போல பலரும் அவரது வீடியோவின் கீழ் சென்று சற்று ஆபாசமாகவும் கமெண்ட் செய்தார்கள். இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க, சோலோ யூடியூபர்ஸ் சிலர் அந்த பாத்ரூம் டூர் வீடியோவை வழக்கம் போல கலாய்த்து வீடியோ போட்டு வியூஸ்களை அள்ளினர்.

பொதுவாகவே எந்த விதமான பேக்குரவுண்ட்-ம் இல்லாமல் யூடியூப் சேனல் தொடங்கி கடுமையாக கஷ்டப்பட்டு தான் சோலோ யூடியூபர்ஸ் ரீச் ஆக முடியும்.

Also Read  'கோலமாவு கோகிலா' பட நடிகர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்…!

மீரா மிதுன், டிக்டாக் திவ்யா, சூர்யா தேவி, ஜிபி முத்து என பலரையும் ட்ரோல் செய்து கிரியேட்டீவாக வீடியோ போட பல நூறு யூடியூபர்கள் உள்ளனர்.

அவர்கள் வழக்கம் போல ட்ரெண்டிங்கில் வந்த அர்ச்சனாவின் வீடியோவை எடுத்து கலாய்க்க, டென்சன் ஆன அர்ச்சனா அவர்கள் அனைவருக்கும் காபிரைட் ஸ்ட்ரைக் கொடுத்துவிட்டார்.

பொதுவாக யூடியூப்பில் காப்பிரைட் ஸ்ட்ரைக் மற்றும் காப்பிரைட் கிளைம் என இரண்டு உள்ளது.

ஒரு வீடியோ மீது கிளைம் கொடுத்தால் அந்த வீடியோ மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி அந்த வீடியோவுக்கு கிளைம் கொடுத்தவர்களுக்கு செல்லும்.

ஏதோ ஒருவகையில் அந்த வீடியோவுக்கு சொந்தக்காரர்கள் தான் கிளைம் கொடுப்பார்கள்.

இதனால் யூடியூப் பக்கத்துக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அர்ச்சனா கொடுத்த காப்பிரைட் ஸ்ட்ரைக்கோ அப்படி அல்ல.

தொடர்ந்து 3 ஸ்ட்ரைக் வாங்கினால் யூடியூப் பக்கம் 90 நாட்கள் முடங்கிவிடும். அதனை பயன்படுத்த முடியாது. பல ஆண்டுகால உழைப்பு வீணாகிவிடும்.

Also Read  ‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

யூடியூப் நிர்வாகம் இதற்காக பல வழிமுறைகளையும் வகுத்துள்ளது. கார்ப்பரேட் யூடியூப் டெவெலப்பர் மூலம் பல சின்னத்திரை பிரபலங்கள் யூடியூப் சேனல்களை வைத்துள்ளனர். அவர்கள் டெவலப்பர்கள் மூலம் எளிதாக மக்களிடன் ரீச் ஆகிவிடுவார்கள். காரணம் இவர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள்.

லாக்டவுன் காலத்தில் தான் கடந்த ஆண்டு பல பிரபலங்களும் யூடியூப் பக்கம் வரத்தொடங்கினர்.

இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் சோலோ கிரியேட்டர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

பிரிட்ஜ் டூர், பாத்ரூம் டூர் செல்பவர்களுக்கு மத்தியில் முழுக்க முழுக்க கிரியேட்டிவாக மட்டுமே சிந்தித்து செயல்பட்டு வருகின்றனர் சோலோ கிரியேட்டர்கள். இவர்களுக்கு தான் அர்ச்சனா ஸ்ட்ரைக் கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான சோலோ யூடியூபர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அதிலும் மிகப்பெரிய பிரபலமான மதன் கெளரி கூட இதுகுறித்து பேசி சோலோ யூடியூபர்களுக்கு ஆதரவான தனது மனநிலையை சொல்லி இருந்தார்.

ஆனால் அந்த வீடியோவில் அவர் அச்சுமா என சொல்லிய வார்த்தைக்கு காப்பிரைட் பிரச்சனை எழ, அது விஸ்வரூபம் எடுத்தது.

Also Read  சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

பிறகு யூடியூப் அந்த பிரச்சனையில் மதன் மீது தவறில்லை எனவும் ஒரு மெயில் அனுப்பி விட்டனர்.

சோலோ யூடியூபர்கள் ஒருபக்கம் ரவுண்ட் கட்ட, உடனே அர்ச்சனா தன்னையும், மகளையும் ஆபாசமாக பேசினார்கள் என பேட்டி கொடுத்தார்.

பொதுவெளியில் கலாய்ப்பது என்பது பிரபலங்களுக்கு சாதாரணமானது தான் எனவும், விஜய் டிவியில் பாடி ஷேமிங், ஒருவரை மட்டமாக பேசுவது எல்லாம் நடப்பதை மட்டும் ரசித்துவிட்டு, சோலோ யூடியூபர்களை மட்டும் மட்டமாக பேசுவது ஏற்க முடியாது எனவும் ஒருபக்கம் குரல் எழுந்து வருகிறது.

தற்போது அர்ச்சனா மெளனம் காத்து வந்தாலும், சோலோ யூடியூபர்கள் பலர் அந்த யூடியூப் வருமானத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பதால் அவர்கள் பெற்ற காப்பிரைட் ஸ்ட்ரைக் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கதறி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் யார் மீது நியாயம் என்பதை தாண்டி, கெத்தாக ஒன்று கூடி அசத்தி விட்டனர் சோலோ யூடியூபர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி’ விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!

Lekha Shree

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

“நான் படம் தயாரிக்க போகிறேன். நடிக்க விருப்பம் இருந்தால் வாங்க” – வடிவேலுவுக்கு மீரா மிதுன் அழைப்பு!

Shanmugapriya

கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் விவேக்…!

Lekha Shree

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்

sathya suganthi

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint

“ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்” – வைரமுத்து

Lekha Shree

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

பிரியா பவானிசங்கர் வீட்டில் நடந்த சோகம்! என்ன ஆச்சு?

Lekha Shree

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

தேம்பி அழும் குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan