a

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!


கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜய் வசந்த், ஒரு லட்சத்து 37 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் பொன்ராதாகிருஷ்ணனை தோற்கடித்து வெற்றி வாகை சூடி உள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

Also Read  பந்தயத்துக்கு அந்தரத்தில் நடந்த சிறுமி, ஓஎம்ஆர் அட்ராசிட்டி

இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

தேர்தலில் பொன்ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 38 ஆயிரத்து 087 வாக்குகள் பெற்ற நிலையில், விஜய் வசந்த் 5 லட்சத்து 76 ஆயிரத்து 37 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதையடுத்து விஜய்வசந்துக்கு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  தக்காளி சாப்பிட்ட தங்கத்தமிழ் செல்வன்... கலக்கலான புகைப்படங்கள் இதோ!

பிரபல தொகுப்பாளினியான டிடி பதிவிட்ட ட்வீட்டில், இந்த வெற்றிக்கு பல வாழ்த்துகள் சகோதரா.. மக்களுக்கு உங்களால் முடிந்த நல்லதை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் வாழ்த்துகள் விஜய், உங்கள் தந்தையின் சேவையையும் மரபையும் தொடருங்கள்.. உங்களின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Also Read  "உதயநிதி பற்றி பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தகொதிப்பு அதிகமாகிறது" - அமித்ஷா

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், விஜய் வசந்த்ணா உங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. களத்துல கலக்குங்க.. கடவுளின் ஆசீர்வாதம் என குறிப்பிட்டுள்ளார்.

பாடகர் கிரிஷ் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் இந்த வெற்றிக்காக வாழ்த்துகள் விஜய் வசந்த்.. இது உங்கள் அப்பாவின் ஆசிர்வாதம் தான் வேறொன்றும் இல்லை.. சிறப்பாய் செய்யுங்கள் சகோ என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஷாந்தனு பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் வாழ்த்துகள் டார்லிங்.. உங்கள் அப்பாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவில் இணையும் சிவாஜி மகன்..! அட இவரும் இணைகிறாரா?

Tamil Mint

கொரானாவால் என் கணவர் பலியானதற்கு போலீஸ் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

Tamil Mint

வாத்தி கம்மிங்…! அப்பாவு : ஆங்கில ஆசிரியர் டூ அவைத்தலைவரான கதை…!

sathya suganthi

ஊடரங்கை விதிமுறைகளை கடுமையாக்கும் தமிழக அரசு…! புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Devaraj

மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி; சென்னை மாநகராட்சி மறுப்பு

Tamil Mint

“பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” – அமைச்சர் பாண்டியராஜன்

Shanmugapriya

திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

Lekha Shree

நாங்கள் மிட்டாய் கொடுக்கிறோம் என்றால் நீங்கள் என்ன அல்வா கொடுக்கிறீர்களா? – ஸ்டாலின் காட்டம்!

Lekha Shree

முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Tamil Mint

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

துரைமுருகன், டி ஆர் பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Tamil Mint