“ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி” – விஜயகாந்த் அறிவிப்பு


தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது.

Also Read  எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ஒரு கோடி குறைந்தது! - ஓபிஎஸின் சொத்து மதிப்பு 509% அதிகரிப்பு! - முழு விவரம்!

போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.9.2021 மற்றும் 17.9.2021 ஆகிய 2 நாட்கள் காலை 10 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு உரிய விருப்பமனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மெரினாவில் கருணாநிதி உடலடக்கத்துக்கு இடம் தராதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்...!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., டிடிவி தினகரனின் அ.ம.மு.க கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இன்று பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

Also Read  வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

இந்த அறிவிப்புகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சத்யராஜின் மகள் சமூக வலைதளங்களில் பதிவு!

Shanmugapriya

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj

ரம்ஜான் திருநாள் – களைகட்டிய ஆன்லைன் பிரியாணி விற்பனை!

Lekha Shree

ஊரடங்கு உத்தரவை மீறி இறுதி ஊர்வலத்துக்கு திரண்ட மக்கள்… யாருக்காக தெரியுமா?

Lekha Shree

கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க எழுத்தாளர்கள் கோரிக்கை.

Tamil Mint

தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Jaya Thilagan

நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

ஸ்டார் வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் கோகுல இந்திரா?

Bhuvaneshwari Velmurugan

போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம்

Tamil Mint

மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

Tamil Mint

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree