வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார்: பிரேமலதா விஜயகாந்த்


சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க வரி வசூலிப்பதை கைவிடக் கோரியிருக்கிறார்கள்.

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு 40,000 கோடி ரூபாயை நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளின் விலை உயர்வை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும் எனவும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

அதைத்தொடர்ந்து  சட்டமன்றத் தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் எந்தக் கட்சி உடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 

Also Read  பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

அதற்கு “2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழகத்தின் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது குறித்து, கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஜனவரி 2021-ல் அறிவிப்பார்” என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த தேர்தலில் கட்சிக்காக, விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறை…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின்…! ஸ்டாலின் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி…! முழு விவரம் உள்ளே…!

Devaraj

ஔவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி பேசிய மோடி!

Tamil Mint

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவிற்கு பலி.!

Tamil Mint

நடிகர் விவேக்கிற்காக பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் காரியம்..!

Devaraj

“ரமணா” படப்பாணியில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள்: தீபாவளி வரை தாங்குமா.?: நேரடி ரிப்போர்ட்.!

mani maran

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint

+2 பொதுத்தேர்வு – தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை!

Lekha Shree

தமிழகத்தில் நீட் தேர்வு விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை குறைவு..!

suma lekha

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

“என்ன ராகவா MP4-ல வந்திருக்கீங்க” – இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்! #பாலியல்_ஜல்சா_கட்சி

Lekha Shree

திமுகவின் மற்றுமொரு எம்.எல்.ஏக்கு கொரோனா உறுதி

Tamil Mint