ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: விஜேந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவு


மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11-வது நாளாக தொடரும் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் ஏற்படவில்லை. 

இந்நிலையில், “மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் இல்லையென்றால், ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்” என குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

விஜேந்தர் சிங், போராட்டம் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், எனக்கு அளிக்கப்பட்ட ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என உறுதியாக தெரிவித்தார்.

Also Read  ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

 

தொடர்ந்து பேசிய அவர், “பஞ்சாபில் பயிற்சி பெற்றவன் நான். குளிர்காலத்தில் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில், சகோதரன் என்ற முறையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தடகள வீரர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர். அரசு பணியில் உள்ளதால், அவர்களால் நேரில் வர முடியவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம்” என விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த், அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்த முழு வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

Also Read  "கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது " - எடியூரப்பா திட்டவட்டம்!

“விவசாயிகளின் பாரத் பந்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  எங்கள் கட்சி அலுவலகங்களின் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்”என காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint

பாரதியாரின் 100 வது நினைவு தினம்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

suma lekha

குஜராத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்

Tamil Mint

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

Lekha Shree

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை வருமா? மத்திய அரசு விளக்கம்

sathya suganthi

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

நடனமாடும் நாய் – இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

Shanmugapriya