‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்..!


மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ‘சித்திரம் பேசுதடி’ நரேனும் நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி, பாண்டிச்சேரியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. பின் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

Also Read  வெளியானது நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் முதல் பாடல்..!

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் கிளான்ஸ் வெளியானது.

இந்த பர்ஸ்ட் கிளான்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த பர்ஸ்ட் கிளான்ஸ் வெளியானதும் விக்ரம் படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என சில யூகங்கள் உலா வருகின்றன.

Also Read  "கபிலா என்ன ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போ பா" - ஆர்யாவிடம் கோரிக்கை வைத்த பிரபலம்…!

அதாவது, முக்கிய சாட்சியான நரேனை முன்னாள் காவல்துறை அதிகாரி விக்ரம் (கமல்) காப்பற்றுவதே கதை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் சேதுபதி முதன்மை வில்லனாகவும் பகத் பாசில் அரசியல் கட்சி தலைவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றிமாறன்-சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கும் இயக்குனர் அமீர்?

Lekha Shree

5 மொழிகளில் விஷாலின் லத்தி…

suma lekha

வெளியானது அருண்விஜய்யின் ‘பார்டர்’ பட டிரெய்லர்…!

Lekha Shree

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint

உலக அளவில் சாதனை படைத்த ‘அண்ணாத்த’… குஷியில் ரசிகர்கள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

மக்களுக்காக களமிறங்கிய சோனு சூட்! – நேரடியாக சந்தித்து உதவி!

Shanmugapriya

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

Lekha Shree

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

“அவளால் தான் நான் இந்த வீட்டிற்கு வந்தேன்!” – யாஷிகா குறித்து பேசிய ‘பிக்பாஸ்’ நிரூப்..!

Lekha Shree