உருக்கமாக பேசிய விராட் கோலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!


டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நமீபியா அணியுடனான விளையாட்டு முடிந்த பிறகு பேசிய விராட் கோலியின் வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ThankyouViratKholi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஐசிசி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி நேற்று நமீபியாவுடன் மோதியது. இந்த தொடர் விராட் கேப்டனாக விளையாடும் கடைசி டி20 உலக்கோப்பை தொடர்.

Also Read  பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

இந்த விளையாட்டில் முதலில் களமிறங்கிய நமீபியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கேஎல் ராகுல் 54 ரன்களும் ரோகித் சர்மா 56 ரன்களும் அடித்து அபாரமாக விளையாடினர். ரோகித் அவுட்டானவுடன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 25 ரன் சேர்த்தார்.

இப்போட்டிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட், “இப்போது தான் பெரிய அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக உணர்கிறேன். கடந்த ஆறு, ஏழு வருடங்களாக அதிகமான பணிச்சுமை இருந்தது.

இதனால் அழுத்தம் அதிகமாக இருந்தது. என்னுடைய பணிச்சுமையை குறைக்க இதுதான் சரியான நேரம். இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்ல முடியாது என தெரியும். இருந்தாலும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

Also Read  வேளாண் சட்டங்கள் ரத்து: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!

உலக கோப்பை தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடினர். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் பவர்பிளே 2 ஓவர்களில் அடித்து விளையாடி இருந்தால் முடிவுகள் சாதகமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

எங்களின் பயிற்சியாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இனி இந்திய அணியின் கேப்டனாக செயல்படாவிட்டாலும் களத்தில் ஆக்ரோஷம் குறையாமல் விளையாடுவேன். ஏதோ ஒரு வகையில் அணிக்கு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்” என உருக்கமாக தெரிவித்தார்.

Also Read  "இந்திய அணி பைனலுக்கு வரவேண்டும்.. ஆனால்" - சோயப் அக்தர் வைத்த ட்விஸ்ட்..!

இதையடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ThankyouViratKholi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: அதிர்ச்சி தகவல் கொடுத்த மத்திய அரசு

mani maran

ஓய்வு பெற்றார் பெரேரா!

Jaya Thilagan

வெளியானது ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை .!

suma lekha

இரு மடங்கு வேகத்தில் உருகும் இமயமலை பனிப்பாறைகள் – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

Tamil Mint

சிஎஸ்கே வின் கலக்கல் ஜெர்சி – இணையத்தில் வைரலாகும் தல தோனியின் புகைப்படம்!

HariHara Suthan

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Tamil Mint

#JusticeForChaitra… பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை.. ஹைதராபாத்தில் கொடூரம்..!

suma lekha

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் தான் டாப்.!

suma lekha

மோடியின் தலைமையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்- அமித்ஷா

Shanmugapriya