“எங்களிடம் துணிச்சல் இல்லை!” – தோல்வி குறித்து விராட் கோலி விளக்கம்..!


டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த லீக் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். வழக்கமாக அதிரடி காட்டும் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி உள்பட அனைவருமே சோபிக்கவில்லை. சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Also Read  நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்களும் ஹர்திக் 23 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Also Read  இதுலயுமா... தோனியின் மோசமான சாதனையையும் முறியடித்த கோலி!

இதற்கிடையே போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்வி குறித்து கூறுகையில், “இது விசித்திரமாக உள்ளது. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தைரியமாக செயல்படவில்லை.

இதேபோல் பீல்டிங்கிலும் களமிறங்கியபோது வீரர்களிடம் போதுமான துணிச்சல் இல்லை. இந்திய அணிக்காக ஆடும் போது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

Also Read  கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் - குவியும் பாராட்டு

ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். அதை சமாளித்து தான் விளையாட வேண்டும். எங்கள் ஆட்டங்களில் எப்போதும் அதிக அழுத்தம் இருக்கும்.

பல வருடங்களாக நாங்கள் அதை ஒரு குழுவாகும் முறியடித்துள்ளோம். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் அதை செய்யவில்லை. எங்களைவிட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனைக்கு துணை முதல்வர் வாழ்த்து!

Lekha Shree

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் நிதி

sathya suganthi

ஏறுமுகத்தில் கொரோனா – வார இறுதியில் ஊரடங்கு..!

Lekha Shree

“திட்டமிட்ட படி நடக்கவில்லை” – ஜிஎஸ்எல்வி-எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி..!

Lekha Shree

PUBG-ன் புதிய பரிணாமமான Battlegrounds Mobile India விளையாட்டுக்கான முன்பதிவு தொடக்கம்…!

Lekha Shree

வாட்ஸ் அப்பிற்கு ரூ. 1,948 கோடி அபராதம் விதித்த அயர்லாந்து..!

suma lekha

பூண்டி ஏரி திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

mani maran

கிரிக்கெட் போட்டியில் கால்பந்து விளையாடி ரன் அவுட் செய்த நியூசிலாந்து வீரர்!

Lekha Shree

மணமேடையில் தூங்கிய மணமகன்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

Tamil Mint