டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி…! ரசிகர்கள் ஷாக்..!


இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக டி20 கேப்டன்சியில் இருந்து விலகினார் விராட்.

அதன்பின்னர், ஒருநாள் கேப்டன்சியில் இருந்து பிசிசிஐ அவரை விலக்கியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர், இதுகுறித்து விராட் மற்றும் கங்குலி வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்களால் இந்த விவகாரம் பூதாகாரமானது.

Also Read  மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த 'கோ' பட நடிகையின் சகோதரர்!

இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அதில் முதல் போட்டியில் விராட் தலைமையிலான இந்திய அணி வென்றது. 2-வது போட்டியில் காயம் காரணமாக விராட் விளையாடவில்லை. அப்போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

அந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வென்றது. இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால் 3-வது மற்றும் இறுதி போட்டி முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

அப்போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி ஆடி வந்த போது டீன் எல்கர் அஸ்வின் வீசிய பந்து lbw என்று கள நடுவர் தீர்ப்பு அளித்தார்.

Also Read  நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஆனால், எல்கர் ரிவ்யூ செய்த போது பந்து மேலே சென்றது தெரியவந்ததால் நாட் அவுட் ஆன தீர்ப்பானது. இதில் கடுப்பான அஸ்வின் மற்றும் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக் முன்னால் வெறுப்பில் சில வார்த்தைகளை பேசினர்.

அதில் கோலி, “பந்தை தேய்த்து பளபளப்பேற்றும் போது உங்கள் அணியினர் மீது கவனம் செலுத்து. எதிரணியினரை அல்ல. எப்போதும் யாரையாவது எதிலாவது மாட்டி விடுவது” என்று கூறினார்.

மேலும் அஸ்வின், “வெற்றி பெற இதை விட சிறந்த வழிகள் உள்ளன. சூப்பர் ஸ்போர்ட்ஸ்” என கூறினார். அதையடுத்து கே.எல் ராகுல் “ஒரு நாடே 11 வீரர்களுக்கு எதிராக செயல்படுகிறது” என பேசினார்.

Also Read  இந்தியா Vs தென்னாப்பிரிக்கா: சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி…!

இந்த விவகாரத்தில் ஐசிசி அதிகாரிகள் இந்திய அணி நிர்வாகத்திடம் கோலி, அஸ்வின், ராகுல் நடத்தை குறித்து எச்சரித்துள்ளதாக espn cric info செய்தி வெளியிட்டது.

இந்த சம்பவம் குறித்து போட்டி முடிந்தபின் கோலி கூறுகையில், “அது பற்றி சர்ச்சை செய்ய விரும்பவில்லை” என கூறினார்.

விராட், அஸ்வின் மற்றும் ராகுலின் இந்த செய்கைக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில் விராட், “எல்லாவற்றிற்கும் ஒரு தருணத்தில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய சூழல் உண்டாகும். அந்தவகையில் நான் எனது டெஸ்ட் கேப்டன் பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அதில் பிசிசிஐ-க்கும், தோனிக்கும், ரவி சாஸ்திரிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ…!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதல் அணியில் தமிழக வீராங்கனை தேர்வு!

Lekha Shree

சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

வினோத திருட்டு… வியப்பூட்டும் தகவல்கள்… கைலாஷ் செய்தது என்ன?

VIGNESH PERUMAL

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

Lekha Shree

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

நாடு முழுவதும் புதிதாக 45,083 பேருக்கு தொற்று பாதிப்பு: இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

நாடு முழுவதும் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!

suma lekha

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan

பெரும் எதிர்பார்ப்பில் ஃபோர்டு ஊழியர்கள்…! என்ன செய்யப்போகிறது டாடா நிறுவனம்?

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya