“எங்கள் சகோதரத்துவத்தை யாரும் அசைக்க முடியாது” – ஷமி மீதான விமர்சனங்களுக்கு விராட் பதிலடி..!


துபாயில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் குரூப்-2 பிரிவில் உள்ள இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.

அந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது.

இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

Also Read  விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி நடைபெறும்: நரேந்திர சிங் தோமர்

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார். அதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி இருந்தனர்.

ஆனால், அந்த விமர்சனங்கள் ஒருகட்டத்தில் மத ரீதியாக முன்வைக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால், ஷமிக்கு ஆதரவாக பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட தொடங்கினர்.

Also Read  உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு…! இந்தியாவில் இவ்வளவு கோடீஸ்வரர்களா…! முழு விவரம் இதோ…!

அந்தவகையில் இன்று விராட் கோலி இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான இணைய விமர்சனங்களுக்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாளை டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதவுள்ளன. இதுதொடர்பான பிரஸ் மீட்டில் பேசிய விராட் முகமது ஷமி மீதான இணைய விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

அப்போது, “மதத்தின் அடிப்படையில் ஒருவரை தாக்கிப் பேசுவது ஒரு மனிதனாக நாம் செய்யும் மோசமான செயலாகும். மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம்.மக்கள் எங்களை புரிந்துகொள்ளாமல் அவர்களின் விரக்தியை எங்கள் மீது திணிக்கின்றனர்.

நாங்கள் களத்தில் விளையாடுபவர்கள். சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கருத்துக்களை பதிவிடும் முதுகெலும்பு இல்லாதவர்கள் அல்ல. இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது கேளிக்கையாக மாறியிருப்பது வேதனைக்குறியது.

Also Read  ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…!

நாங்கள் ஷமியுடன் 200% துணை நிற்கிறோம். எங்கள் அணியில் இருக்கும் சகோதரத்துவத்தை யாராலும் அசைக்க முடியாது” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

‘அப்போது விஸ்மயா இப்போது சுனிஷா’ – கேரளாவில் தொடரும் தற்கொலைகள்… பதறவைக்கும் ஆடியோ வெளியீடு..!

Lekha Shree

மணமேடையில் குட்கா மென்ற மணமகன்: துப்பிவிட்டு வர சொல்லி அரை விட்ட மணமகள்.!

mani maran

இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர், பாவ்லோ ரோஸீ மரணம்

Tamil Mint

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கா? – சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

டெல்லியில் விவசாயி உயிரிழந்த சம்பவம்: 7 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Tamil Mint

தொடர்ந்து சரியும் தங்கம் விலை? இன்றைய விலை நிலவரம்

Tamil Mint

மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!

Lekha Shree

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

சென்னை 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா?

Tamil Mint

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha