இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்படும் விராட் கோலி?


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் போகும் பட்சத்தில் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தூக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Also Read  கேரள வரலாற்றில் முதல்முறை… விஸ்மயா வழக்கில் கைதான கணவர் பணி நீக்கம்…!

மேலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் மங்கியுள்ளது. மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

இதனால் இந்திய னியின் கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Also Read  கோவிஷீல்டு தடுப்பூசி… ஆயுள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு! ஆய்வில் அசத்தல் தகவல்..!

இந்த டி20 உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததால் இதுவரை கோப்பை வென்று கொடுக்காத விராட் கோலி இதில் கோப்பையை வென்று கொடுத்து விட்டு வெளியேறுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

Also Read  நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு…!

வீரர்கள் தேர்வு, பேட்டிங் வரிசையில் மாற்றம் என அவர் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாது போனால் ஒருநாள் அணியின் கேப்டன் பதிவியை விராட் கோலி இழக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

சென்னை டு பாரிஸ் – நேரடி விமான சேவை தொடக்கம்..!

Lekha Shree

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

Devaraj

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

“என்னவா இருக்கும்?” – சிஎஸ்கே ஜெர்சியில் டேவிட் வார்னர்..! பதிவை சில நிமிடங்களில் டெலிட் செய்தது ஏன்?

Lekha Shree

ஷாக் கொடுத்த தோனி அவுட்!

Tamil Mint

ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை : பிரதமர் மோடி பாராட்டு

suma lekha

45 வயது மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்…!

Lekha Shree

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

ஐசிசி தரவரிசை – இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

Devaraj

வாவ்… 550 கேக்குகளை வெட்டிக் கொண்டாட்டம்: வைரலாகும் வீடியோ

suma lekha