a

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!


நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. கொரோனா பரவலால் சாமானிய மக்கள் முதற்கொண்டு விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு படுக்கை வசதிகளிலும் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. டெல்லியில் ஆக்ஸிஜனுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக போதுமான வசதிகளை செய்து தர மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

Also Read  தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

இந்த நிலையில் டெல்லி மாநகர காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி கொரோனவுக்கு எதிராக போராடுவோம் என விராட் கோலி அறிவுறுத்தியுள்ளார்.

Also Read  மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருந்த போது உயிரிழந்த கொரோனா நோயாளி! - அதிர்ச்சி சம்பவம்

முகக் கவசம், தனிமனித இடைவெளியை ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள விராட் கோலி, டெல்லி போலீஸ் உடன் மக்கள் ஒத்துழைப்பு வழங்கி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய சூழல் கடுமையான சவாலாக உள்ளதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். கொரோனவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இந்தியா மீண்டும் போராட தொடங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Also Read  350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

விராட் கோலியின் காணொளியை பலரும் இணையத்தில் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் தொடக்கம் – சச்சின் மகன் முன்பதிவு !!!

Tamil Mint

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் திறன் இந்த அணிக்கு இல்லை: சேப்பல் சாடல்!

Lekha Shree

பிரபல நடிகைக்கு கோலாகலமாக நடந்த 2வது திருமணம்… தொழிலதிபரைக் கரம்பிடித்தார்…!

Tamil Mint

பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்! மத்திய அரசுக்கு விளக்கம்

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

Lekha Shree

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு – காங்கிரஸ் வாக்குறுதி!

Lekha Shree