விஸ்மயா மர்ம மரணம்! சகோதரர் சொன்ன பகீர் தகவல்கள்!


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற 23 வயது இளம்பெண் கடந்த திங்கட்கிழமை தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணம் கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மோட்டர் வெயிகல் இன்ஸ்பெக்டர் கிரன்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

வரதட்சனையாக 100 பவுன் நகை, 1.5 ஏக்கர் நிலம், 10 லட்சம் மதிப்புள்ள கார் கொடுத்துள்ளனர்.

இவ்வளவு கொடுத்தும் கார் போதுமான மைலேஜ் கொடுக்கவில்லை என்று கூறி தான் அடித்து துன்புறுத்தியுள்ளார் கிரண்.

இந்த வழக்கு தொடர்பாக விஸ்மயாவின் அண்ணன் விஜித் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

Also Read  பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

அதில், “பள்ளியில் இருந்தே மிகவும் தைரியமான பெண் விஸ்மயா. அனைவரிடமும் அன்பாக பழகுவாள்.

இப்போது ஆயுர்வேத மருத்துவம் இறுதி தேர்வு எழுத இருந்தாள். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. அவளது மரணத்துக்கு கிரண் குமார் தான் காரணம்.

மேட்ரிமோனியல் தளத்தில் தனக்கு ஏற்ற வரனை விஸ்மயா பார்த்து வந்தார். அப்போது தான் கிரண்குமார் உறவினர் மூலம் தெரிய வர எனது நம்பருக்கு தான் முதலில் போன் வந்தது. கிரண் குமார் தான் பேசினார்.

அவருடன் பேசிய பின் விஸ்மயா மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் உறவினர்கள் மூலம் வரதட்சணை கேட்டு அவரது குடும்பத்தினர் தகவல் சொல்லி அனுப்பினர்.

விஸ்மயாவுக்கு சேர வேண்டிய சொத்தை கொடுக்க அப்பா முடிவெடுத்தார். அதன்படி தான் 100 சவரன் பவுன் நகை, 10 லட்சம் மதிப்புள்ள கார், 1.5 ஏக்கர் நிலம் வழங்குவதாக கூறினார்.

Also Read  "கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வரன் தான் வேண்டும்" - திருமண டிமாண்ட் பட்டியலில் சேர்ந்தது கொரோனா தடுப்பூசி!

கிட்டதட்ட 25 ஆண்டுகளாக எனது அப்பா சவுதியில் தான் வேலை பார்த்து வந்தார். இப்போது தான் எங்களுடன் உள்ளார். ஆனால் இனி அவரால் விஸ்மயாவை பார்க்க முடியாது.

மிகவும் ஆசையாக இருந்தார் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க, திருமணம் முடிந்து 8 மாதம் கழித்து ஒருமுறை வீட்டுக்கு வந்த போது தான், தனது கணவர் தன்னை கொடுமை செய்வதாகவும், அடிப்பதாகவும் விஸ்மயா கூறினார்.

அதனைத் தொடர்ந்து கிரண்குமாரிடன் பேசினோம். அப்போது எங்கள் கண்முன்னே என் தங்கையை அடித்தார். போலீஸில் புகார் அளித்தால் குடும்ப கெளரவம் கெட்டுப்போகும் என்று தவறு செய்துவிட்டோம்.

விஸ்மயாவும் உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து கிரண் குமாரை விட்டு வராமல் அங்கேயே இருந்து இப்போது இறந்தும் விட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் விஸ்மயாவின் தாய் கூறும் போது, தேர்வுக்கு 5,000 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றும், அதை கிரண் குமார் கேட்டால் அடிப்பார் என்றும் கூறியுள்ளார்.

Also Read  திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி - மத்திய உள்துறை அமைச்சகம்

அந்த சமயம் அவரது தாயும் பணம் இல்லை என்று கூறிவிட்டாராம். கடைசியாக இறக்கும் முன் கிரண் குமார் அடித்ததால் ஏற்பட்ட காயங்களை தனது உறவினர்களுக்கு போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார் விஸ்மயா.

இப்போது கிரண் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கேரளாவில் 2016 முதல் 2020 வரை மட்டும் 1080 வரதட்சனை கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோல 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மாவட்டம் தோறும் வரதட்சணை கொடுமையை தடுக்க சிறப்பு பிரிவுகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடலாமா? வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு…!

sathya suganthi

புதுச்சேரியில் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு – எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

sathya suganthi

இன்று மோடி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா… 56 ரயில்கள் ரத்து!

Lekha Shree

TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

Tamil Mint

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

மது அருந்துவதற்கான வயது வரம்பு 21 ஆக குறைப்பு

Devaraj

ஆணவக் கொலையால் உயிரிழந்த கணவர் பிரனயின் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட அம்ருதா!

Tamil Mint